Primary tabs

மன்னவை யெல்லா முரிய வென்ப.
வரலாறு :
பெயரை முன்னும் பின்னும் அடுத்து வருவன :
‘அதுமன்’ -- ‘கொன்னூர்’ [குறுந் - 138 ] என்பன.
வினையை முன்னும் பின்னும் அடுக்குமாறு :
‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர’ [ அகம் - 276 ]
‘ஓ தந்தார், ஓ கொண்டார்’ என்பன.
தம்மீறு திரிந்தவை :
‘கொன்னை’ ‘மன்னை’ [ சொல். இடை - 6, 4 ] என்பன.
பிறிதவணிலையிற்று :
‘மகவினை’ என்பது. (3)
247.
கழிவே யாக்க மொழியிசைக் கிளவியென்
றம்முன் றென்ப மன்னைச் சொல்லே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இடைச்சொற்களை
ஏழுவகையென
விரித்தார் ; அவற்றுள் மூன்றுவகை மேலே யுணர்த்தி,
ஒழிந்த
நான்கு வகையும் தத்தங் குறிப்பிற் பொருள்செய்குநவற்றை
விரிப்பான் றொடங்கினார் ; அது கருத்து.
வரலாறு :
‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’ [ புறம் - 235 ]
எனக் கழிவின்கண் வந்தது.
‘பண்டு காடுமன், இனிக்
கயல் பிறழும் வயலாயிற்று’
என ஆக்கத்தின்கண் வந்தது.
‘கூரியதோர் வாண்மன்’ இனி
இற்றென்றானும் .... ஒருசொல்லை
ஒழிவுபட வந்தமையின் ஒழியிசை என்பது.
248.
விழைவே கால மொழியிசைக் கிளவியென்
றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே.
வரலாறு :
‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே’ [குறுந். -14 ]
இது விழைவின்கண் வந்தது.
‘பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே’ [குறுந்-14]
இது காலம்பற்றி வந்தது.
‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர’ [ அகம் - 276 ]
என்பது, வந்தக்கால் இன்னதொன்று செய்வல் என்னும் சொல்
ஒழிந்துநின்றமையான் ஒழியிசைக்கண் வந்தது.
யாதானும் ஒருசொல் ஒழிவுபட வரின் அஃது
ஒழியிசை எனப்படும்
என்றவாறு. (5)
249. அச்சம் பயமிலி காலம் பெருமையென்
றப்பா னான்கே கொன்னைச் சொல்லே.
வரலாறு :
‘கொன் முனை யிரவூர் போலச்சி