Primary tabs

ஏழாவது
இடையியல்
244.
இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே.
என்பது சூத்திரம்.
இவ் வோத்து என்ன பெயர்த்தோ வெனின், இடையியல் என்னும்
பெயர்த்து.
இச்
சூத்திரம் இடைச்சொற்கெல்லாம் பொதுவாயதோர்
இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.
‘அது மன்’ [ புறம் - 147 ] என்பது பெயரொடு நடைபெற்றது.
‘தமக்கியல்பிலவே’ என்றதனான், இடைச்
சொற்கள் பகவின்றியே
நின்றிசைப்பனவும் உள என்றவாறு.
வரலாறு : உண்டான் என்னுந் தொடக்கத்தன. (1)
245. அவைதாம்
புணரிய னிலையிடைப் பொருணிலைக் குதநவும்
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயி னுருபா குநவு
மசைநிலைக் கிளவி யாகி வருநவு
மிசை நிறைக் கிளவி யாகி வருநவுந்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவு
மொப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென்
றப்பண் பினவே நுவலுங் காலை.
வரலாறு :
புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதவுவன :
‘இன்னே வற்றே’ [எழுத்து. புணரி - 17 ] என்னுந் தொடக்கத்தன.
வினைசெயல் மருங்கில் காலமொடு வருவன :
‘அன் ஆன்’ -- ‘அம் ஆம்’ -- [ சொல்.
வினையி - 8,5 ] என்னுந்
தொடக்கத்தன.
வேற்றுமைப் பொருள்வயின் உருபாவன :
‘ஐ, ஓடு, கு, இன், அது, கண், விளி’ [சொல்.வேற்றுமை
-3] என்னுந்
தொடக்கத்தன.
அசைநிலைக் கிளவி :
‘கேண்மியா’, ‘கண்டிகும்’ [புறம்- 251 ] என்னுந் தொடக்கத்தன.
மற்றையன முன்னே விரிக்கின்றார். (2)
246.
அவைதாம்
முன்னும் பின்னு மொழியடுத்து வருதலுந்
தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலு