தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1267


யூர்’ என்பது. (11) 

255. விழைவின் றில்லை தன்னிடத் தியலும். 

இச்சூத்திரம்     என்னுதலிற்றோ வெனின், மேல் தில் என்னும்
இடைச்சொல்  மூன்றன்பொருட்கும் உரித்தென்று போந்தார்; அவற்றுள்
விழைவின்றில்லை தன்மை யிடத்திற்கே ஆவது. 

வரலாறு:  

‘பெறுகதில் லம்ம யானே’ [குறுந் - 14]

என வரும். 

எனவே,   மற்றைய   இரண்டும்    எல்லாவிடத்துக்கும்    உரிய என்றவாறாம்.
                                                       (12)

256. தெளிவி னேயுஞ் சிறப்பி னோவு
மளபி னெடுத்த விசைய வென்ப. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேற்  கூறிப் போந்த ஏகார
ஓகாரங்களின் வேறுபாடு கண்டு, ஈண்டு உணர்த்துதல் நுதலிற்று.   

வரலாறு:  

‘நீயேஎ கொண்டாய்’ ‘ஓஒ பெரியன்’ என வரும். () 

257. மற்றென் கிளவி வினைமாற் றசை நிலை
யப்பா லிரண்டென மொழிமனார் புலவர். 

இச்     சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேல் தத்தங் குறிப்பிற்
பொருள்செய்குவன    உணர்த்தினார்;    இனி   மற்று   என்பதோர்
இடைச்சொல்   வினைமாற்றும்   அசைநிலையுமாய்   வரும்  என்பது
உணர்த்துகின்றார்.

வரலாறு: 

  ‘இஃது உண்’ என்றாற்கு, ‘மற்று  உண்பல்’ என,  வினைமாற்று
ஆயிற்று. 

   யாவரோடாயினுஞ்சொல்லாடாநின்று ‘மற்றோமற்று’ என்னும்
இடையே; அஃது அசைநிலைக் கட்டுரை. (14) 

258. எற்றென் கிளவி யிறந்த பொருட்டே. 

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,  இதுவும்  தத்தங்  குறிப்பிற்
பொருள்செய்குவனவற்றின்மேல் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை: எற்று என்பது இறந்தபொருள் விளங்கி நிற்கும் என்றவாறு. 

வரலாறு:   

‘எற்றென் னுடம்பி னெழீனலம்’

என வரும்.

‘எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்’ 

என்பதும் அது. இஃது இரக்கப் பொருள் மேற்று என்பது. (15) 

259. மற்றைய தென்னுங் கிளவி தானே
சுட்டுநிலை யொழிய வினங்குறித் தன்றே. 

பல     பொத்தகம் கிடந்தவழி, ஒருவன்  ஏவலாளனைப்  பார்த்துப்,
‘பொத்தகங்   கொண்டுவா’   என்றால்,   அவன்   ஒரு   பொத்தகங்
கொண்டுவந்தவிடத்துத்   தான்   கருதிய   பொத்தகம்  அன்றெனில்,
‘மற்றையது   கொணா’   என்னும்;  என்றக்கால்,  இக்கொணர்ந்ததனை
யொழிக்குஞ் சொல் இக் கொணர்ந்த பொத்தக
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:32:44(இந்திய நேரம்)