Primary tabs

ம் சுட்டிற்றாகலான், கொணர்ந்ததனை ஒழிக்குஞ் சுட்டுநிலை
அதனை யொழித்து ஒழிந்ததென்று அவ்வினத்தல்லது பிறிதொன்று
குறித்தது கொல்லோ எனிற் குறியா; மற்று அப் பொத்தகத்துள் ஒன்றே
பின்னுங் குறித்தது எனப்படும். (16)
260.
மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்.
வரலாறு:
‘கார்மன்ற என்பவள் கண்ணுள்ளே காதலர்
தேர்மன்றத் தோன்றிய’
என்றக்கால், தெளிந்தாள் அவள் என்றவாறு. (17)
261. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே.
வரலாறு:
‘ஏனோரோ தஞ்சம் இருபிறப்பி னோர்க்கும்
வாழ்தல் அரிது’ (18)
262.
அந்தி லாங்க வசைநிலைக் கிளவியென்
றாயிரண் டாகு மியற்கைய வென்ப.
இதுவும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குவனவற்றையும்
அசைநிலையையும் உணர்த்துதல் நுதலிற்று.
வரலாறு:
இடஞ்சுட்டி வந்தது:
‘வருமேசேயிழையந்திற், கொழுநற் காணிய’ [குறுந்-293]
என வரும்.
அசைநிலை:
‘அந்தில் கச்சினன் கழலினன்’ [அகம் - 76]
என வரும். (19)
263. கொல்லே யையம்.
வரலாறு:
இது, ‘குற்றி கொல்லோ, மகன் கொல்லோ, நாய் கொல்லோ, நரி
கொல்லோ’ என வரும். (20)
264. எல்லே விளக்கம்.
வரலாறு:
இது,
‘எல்வளை’ [புறம் - 24]
என வரும். (21)
265.
இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி
பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே.
உரை:
இது,