Primary tabs

ம் ஓரளபாம் என்றவாறு.
வரலாறு:
‘கடல்போற் றோன்றல காடிறந் தோரே’ [அகம்-1]
என வரும்.
உம்மை எதிர்மறையாகலின் குறையாது நிற்றலே பெரும்பான்மை.
(38)
282. உம்மை யெண்ணு மெனவெ னெண்ணுந்
தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே.
வரலாறு:
‘நிலனும் நீரும் தீயும் வளியும் வெளியும் நல்ல’
எனினும் அமையும்; தொகை கொடுத்து எண்ணினும் ஆம்.
எனவென் எண்ணிற்கும் தொகை
கொடுத்தும்கொடாதும் சொல்லி
உம்மையெண்போல ஒட்டிக்கொள்க. (39)
283. எண்ணே கார மிடையிட்டுக் கொளினு
மெண்ணுக்குறித் தியலு மென்மனார் புலவர்.
உரை:
எண்ணேகாரம் இடை நின்று
ஒழிந்த எண்ணால்
வந்தனவற்றையும், ஏகாரவெண்ணால் எண்ணினவே என்றவாறு.
ஏகாரம் எண்ணிடையே நின்றது எனினும், எண்ணி வருகின்ற
எண்ணேயாம் என்றுமாம் எனக் கொள்க.
வரலாறு:
‘தோற்ற மிசையே நாற்றஞ் சுவையே
உறலோ டாங்கைம் புலனென மொழிப’
இதனுள், செவ்வெண் ஓடாநின்றே ஏகாரவெண் இடையே புகுந்தவாறு
கண்டுகொள்க. (40)
284. உம்மை தொக்க வெனாவென் கிளவியு
மாவீ றாகிய வென்றென் கிளவியு
மாயிரு கிளவியு மெண்ணுவழிப் பட்டன.
வரலாறு:
உம்மைதொக்க எனா என் கிளவி வருமாறு:
‘நிலனொனா, நீரெனா, தீயெனா, காலெனா’ என வரும்.
ஆவீறாகிய என்றென் கிளவி:
‘நிலனென்றா, நீரென்றா, தீயென்றா, வளியென்றா’ என வரும். (41)
285. அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும்
பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியு
மேயி னாகிய வெண்ணி னிறுதியும்
யாவயின் வரினுந் தொகையின் றியலா.
வரலாறு:
எனா: ‘சாத்தனெனா, கொற்ற