தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1272


ந்தான்,     கொற்றனும் வரும்’ என்பது எச்சவும்மை; அதனைச்
சாத்தனும்   வந்தான்,   கொற்றனும்  வரலுமுரியன்  என  எதிர்மறை
யும்மையொடு கூட்டிச் சொல்லப்படாது என்றவாறு. (35) 

279. எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். 

உரை :  எஞ்சுபொருட் கிளவி என்பது -- எச்சவும்மை என்றவாறு;
செஞ்  சொல்  ஆயின்  என்பது  --  செவ்வெண்ணாயின் என்றவாறு;
பிற்படக்  கிளவார்  முற்படக்  கிளத்தல்  என்பது  -- காலமுன்னாகச்
சொல்லார் இட முன்னாகச் சொல்லுவார் என்றவாறு. 

வரலாறு:  

‘அடகுபுலால் பாகு பாளிதமு முண்ணான்
கடல்போலுங் கல்வி யவன்’ 

என்பதனுள்,     அடகு புலால் பாகு என்று செவ்வெண்ணாலே
எண்ணிப்,    பின்னைப்    பாளிதமும்    என்று    எச்சவும்மையை
இடமுன்னாக்கி வைத்து எண்ணினவாறு கண்டுகொள்க. (36) 

280. முற்றிய வும்மைத் தொகைச்சொன் மருங்கி
னெச்சக் கிளவி யுரித்து மாகும். 

வரலாறு:  

‘பத்தும் கொடான்’ என்றக்கால், எல்லாம் கொடான் என்றுமாம். 

‘தொகைச்சொல்’  என்றதனான்,  எல்லாங்கொண்டாம், கொண்டார்
என்றும்; எல்லாரும் வாரார் என்றும், வருவர் என்றும் கொள்ளப்படும்.

எச்சவும்மை ஒழிவுப்பொருளை உடைத்தானதுபோல,  முற்றும்மையும்
ஒழிவுப் பொருள்பட வரும் என்று கொள்க. (37) 

281. ஈற்றுநின் றிசைக்கு மேயெ னிறுதி
கூற்றுவயி னோரள பாகலு முரித்தே. 

உரை: மேற் சொல்லப்பட்ட ஐந்து ஏகாரத்துள்ளும் ஈற்றசை ஏகார
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:33:40(இந்திய நேரம்)