தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1271


ன்னும்;   அவ்விடத்து,   ஆக   என்னும்   இடைச்சொல்  பிரிவின்றி
இரட்டித்து நின்றவாறு கண்டுகொள்க. 

‘யான் உனக்கியாதும் ஆகேனோ?’ என்றக்கால், ‘ஆகலாகல்’என்பது;
அவ்விடத்து,  ஆகல்  என்னும்  இடைச்சொல்  பிரிவின்றி  வந்தவாறு
காண்க. 

ஒருவனை     யொருவன் ஒன்று சொன்னால், கேட்டு நின்றான்
ஒருவன்,  ‘என்பதென்பது’  என்னும்;  அது புகழ்ச்சி யிடத்துப் பயிற்சி
உடைத்து; அறிந்து கொள்க.                             (32) 

276. ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே
யாயிய னிலையுங் காலத் தானு
மளபெடை நிலையுங் காலத் தானு
மளபெடை யின்றித் தான்வருங் காலையு
முளவென மொழிப பொருள்வேறு படுதல்
குறிப்பி னிசையா னெறிப்படத் தோன்றும் 

இச்சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  ஒள என்னும் இடைச்சொல்
மூன்றுவகையாற் பொருள்படும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. 

வரலாறு:  

ஆயியல்  நிலையுங்   காலத்தால்    வருதலாவது,    மேற்கூறிய
மூன்றும்போல் வருதல். 

ஒன்று உரைக்குங்கால் இரட்டித்து, ‘ஒள, ஒள’ என வரும். 

அளபெடை நிலையுங்காலத்தால் வந்து, அது பொருள் படுமாறு: 

‘ஒளஉ’ என வரும். 

யாதானும் ஒரு துன்புறவின்கண் அளபெடையின்றித் தான் வருமாறு: 

‘ஒள’ என ஒரு குறிப்புப் பொருட்கண் வருவது என்றவாறு. 

இம்  மூன்றுபொருட்  பகுதியும்   குறிப்பினான்   வேறு   படுத்து
அறிந்துகொள்க.                                        (33) 

277. நன்றீற் றேயு மன்றீற் றேயு
மந்தீற் றோவு மன்னீற் றோவு
மன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும். 

இதுவும்    சொல்லுதற்   குறிப்பினால்    பொருள்    வேறுபடும்
இடைச்சொற்களை உணர்த்துதல் நுதலிற்று. 

வரலாறு:  

நன்றீற்று ஏ : ‘நன்றே நன்றே’ என வரும். 

அன்றீற்று ஏ : ‘அன்றே அன்றே’ என வரும். 

அந்தீற்று ஓ : ‘அந்தோ அந்தோ’ என வரும். 

அன்னீற்று ஓ : ‘அன்னோ அன்னோ’ என வரும். (34) 

278. எச்ச வும்மையு மெதிர்மறை யும்மையுந்
தத்தமுண் மயங்கு முடனிலை யிலவே. 

உரை : எச்ச வும்மையும் எதிர்மறை யும்மையும் தத்தமுள் மயங்கும்
உடனிலையிலவே  என்பது  --  தம்முள் மயங்கி உடனிற்குந் தன்மை
யில என்றவாறு. 

வரலாறு: 

‘சாத்தனும் வ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:33:29(இந்திய நேரம்)