தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1270


தன்மைக்கண் வருமாறு: 

‘கண்ணும்  படுமோ   வென்றிசின்   யானே’   [ நற்றிணை - 61 ]
என வரும். 

படர்க்கைக்கண் வருமாறு:

‘யாரஃ     தறிந்திசி      னோரே’         [   குறந்  -  18  ]
என வரும். (27) 

271. அம்ம கேட்பிக்கும். 

வரலாறு:

‘அம்ம      வாழி      தோழி’           [  ஐங்குறு  -  31 ]
என்றவழி, அது கேளாய் வாழி தோழி என்றவாறாம். () 

272. ஆங்க வுரையசை. 

உரை: ஆங்க  என்னும்    இடைச்   சொல்லதோர்   கட்டுரைத்
தொடர்பினிடை, அசைப்பொருள் படவரும் என்றவாறு. 

வரலாறு:  

‘ஆங்கக்
குயிலு மயிலுங் காட்டிக்கொள
விவனை விடுத்துப் போகியோ’

என வரும்.                                             (29) 

273. ஒப்பில் போலியு மப்பொருட் டாகும். 

இச்சூத்திரம்     என்னுதலிற்றோ வெனின், மேல் இடைச் சொல்
எழுவகைய என்று நிறுத்தவற்றுள் ஒப்பில்போலி என்னும் இடைச்சொல்
உணர்த்துதல் நுதலிற்று. 

ஒப்பில்போலி யாவது,  ஒப்பில்லாதவழி   ஒப்பித்த   வாசகம்  பட
வருவது என்பது. 

வரலாறு: 

‘மங்கலம்  என்பதோர்   ஊருண்டுபோலும்    மழநாட்டுள்’   என
ஒப்பில்லாதவழிப் போலும் என்னும் இடைச்சொல் வந்தவாறு. (30) 

274. யாகா
பிறபிறக் கரோபோ மாதென வரூஉ
மாயேழ் சொல்லு மசைநிலைக் கிளவி. 

இச்சூத்திரம்     என்னுதலிற்றோ     வெனின்,     அசைக்கும்
இடைச்சொற்களைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. 

வரலாறு: 

‘யா பன்னிருவர் உளர்போலும் மாணாக்கர் அகத்தியனார்க்கு’ என,
யா வந்தவாறு காண்க.  

கா: ‘உதுகா’ என வரும்.  

பிற: ‘அதுபிற, இதுபிற, உதுபிற’ எனப்பிற வந்தவாறு.  

‘அது பிறக்கு’ எனப் பிறக்கு வந்தவாறு. 

‘கொடியுவணத்தவரோ’ என அரோ வந்தவாறு. 

‘பிரியேன் வாழேன் போதெய்ய’ என்ப போ வந்தவாறு; 

‘நீர்போ நேரிகை புகன்’ என்பதும் அது. 

‘விளிந்தன்று மாதவத்தெளிந்தவென் னெஞ்சம்’ [நற்றி-178]
என மாது வந்தவாறு. (31) 

275. ஆக வாக லென்ப தென்னு
மாவயின் மூன்றும் பிரிவி லசைநிலை. 

வரலாறு: 

‘நீ   இன்னை,  இனையை என்று  ஒருவனை  யொருவன்  ஒன்று
சொல்லுமிடத்து, அமையும் அமையும், ‘ஆகவாக’ எ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:33:18(இந்திய நேரம்)