தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1278


யுள்ளார் பயின்றாராதலான், அந்நிகரனவற்றாற  பொருத்திச் சொல்ல
அவை விளங்கித் தோன்றும் என்பது.

 இசைபற்றி நிற்பனவற்றிற்கு, ‘இசை சென்று நிலை மருங்கு’ எனவும்,

குறிப்புப்பற்றித் தோன்றுவனவற்றிற்குத்,  ‘தத்தங்  குறிப்புச்  சென்று
நிலைமருங்கு’ எனவும் படும் என்பது.

இசைபற்றித் தோன்றின,

‘துவைத்தலும் சிதைத்தலும்’ [தொல். உரியியல் -61]

என்னுந் தொடக்கத்தன.

குறிப்புப் பற்றி வந்தன,

‘கறுப்புஞ் சிவப்பும்’ [தொல். உரியியல் - 75]

என்னுந் தொடக்கத்தன;

‘நிறத்துரு வுரைத்தற்கு முரிய’ (உரியியல் - 76)

என்றாராகலின், ஆண்டுப் பண்பெனவும் வரும்.

ஒருசொல்லாகப் பலபொருட்கு உரியன,

‘கடியென் கிளவி’ (உரியியல் - 86)

என்னுந் தொடக்கத்தன.

பலசொல் ஒருபொருட்கு உரியன,

‘உறு தவ நனி’ (உரியியல் - 3)

என்னுந் தொடக்கத்தக்கன.

முன்,

‘இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு
மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப’ (பெயரியல்-5)

என்புழி,    நிரனிரை    வாய்பாட்டதாகலான்,    அது   நீக்குதற்குப்,
‘பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’ என்றார் என்பது. (1)

293. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன.

இச்  சூத்திரம்   என்   னுதலிற்றோ வெனின், இருவகைய உரிச்சொல்,
வெளிப்படுவனவும்  வெளிப்படாதனவும்  என. அவற்றுள் வெளிப்பட்ட
உரிச்சொற்களது  பொருள்   சொல்ல   வேண்டா;  அறிந்த  பொருட்
பெற்றியான் பொருட் செல்லுதல் என்பது உணர்த்தியவாறு.

அவ்வாறு வெளிப்பட்ட  உரிச்சொற்களாவன: கலித்தது,  குழைத்தது
என்னுந் தொடக்கத்தன.

வெளிப்பட வாராதனவற்றை விரிக்கின்றார். (2)

294. அவைதாம்
உறுதவ நனியென வரூஉ மூன்று

மிகுதி செய்யும் பொருள வென்ப.

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:34:47(இந்திய நேரம்)