தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1283


323. நம்பு மேவு நசையா கும்மே. 

வரலாறு :

‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம்-198)

என்றக்கால், நச்சி என்பதாம்.

‘பேரிசை நவிர மேஎ யுறையும்’ (மலைபடு-82)

என்றக்கால், நயந்து உறையும் என்பதாம். (32) 

324. ஓய்த லாய்த னிழத்தல் சாஅ
யாவயி னான்கு முள்ளத னுணுக்கம்.

வரலாறு:

‘ஒய்கலை யொருத்தல்’

என்றக்கால், நுணுகிய கலை யொருத்தல் என்பதாம்.

‘கையு மெய்யு மாய்ந் திருந்தார்’

என்றக்கால், சுருங்கி யிருந்தார் என்பதாம்.

‘நிழத்த யானை மேய்புலம் படர’ (மதுரைக்காஞ்சி - 303)

என்றக்கால், மெலிந்து நுணுகிய என்பதாம்.

‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல் - 18)

என்றக்கால், சுருங்கி என்பதாம். (33) 

325. புலம்பே தனிமை. 

வரலாறு:

‘புலம்புவிட் டிருந்தார்’ (மலைபடு - 49)

என்றக்கால், தனிமை துறந்திருந்தார் என்பதாம். (34)
 

326. துவன்று நிறைவாகும். 

வரலாறு:

‘ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்’ (பதிற்றுப் - 11)

என்றக்கால், நிறைந்த மூதூர் என்பதாம். (35) 

327. முரஞ்சன் முதிர்வே. 

வரலாறு:

‘கோடுபல முரஞ்சிய கோளி யாலம்’ (மலைபடு - 268)

என்றக்கால், முதிர்ந்த ஆலம் என்பதாம். (36) 

328. வெம்மை வேண்டல். 

வரலாறு :

‘நீ வெம்மையள்’

என்றக்கால், நீ வேண்டப்படுவாள் என்பதாம். (37) 

329. பொற்பே பொலிவு. 

வரலாறு :

‘அணிகலம் பொற்ப’

என்றக்கால், பொலிய என்பதாம். (38) 

330. வறிது சிறிதாகும். 

வரலாறு :

‘வறிது நெறியொரீஇ’

என்றக்கால், சிறிது நெறி ஒரீஇ என்பதாம். (39) 

331. ஏற்ற நினைவுந் துணிவு மாகும். 

வரலாறு :

‘ஏற்றத் திருந்தார்’

என்றக்கால், நினைத்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:35:41(இந்திய நேரம்)