Primary tabs

வரலாறு:
‘மாதர் வாண்முக மதைஇய நோக்கே’
என்பது, மடம்பட்ட நோக்கு என்பதாம்.
‘மதகளிறு’
என்றக்கால், வலிய களிறு என்பதாம். (80)
372. மிகுதியும் வனப்பு மாகலு முரித்தே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அவையே யன்றி
இவ்விருபொருளும் படும் என்றவாறு.
‘மதகளிறு’
என்றக்கால், மிகுகளிறு என்பதாம்.
‘இளம்பாண்டில்,
தேரூரச் செம்மாந் ததுபோல் மதவினள்’
என்பது, வனப்புடையள் ஆயினள் என்பதாம். (81)
373. புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி.
வரலாறு:
‘அறாஅ யாண ரகன்றலை நன்னாடு’ (அகம்-44)
என்றக்கால், அறாத புது வருவாயை யுடைய நாடு என்பதாம். (82)
374. அமர்தன் மேவல்.
வரலாறு:
‘கூழமர்ந் துண்டாள்’
என்பது, கூழைமேவி யுண்டாள் என்பதாம். (83)
375. யாணுக் கவினாம்.
வரலாறு:
‘யாணது பசலை’ (நற்றிணை - 50)
என்றக்கால், வனப்பின்கண்ணது பசலை என்பதாம். (84)
376. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள.
வரலாறு :
‘கடவுட் பரவினார்’
என்றக்கால், வழுத்தினார் என்பதாம்.
‘கைதொழூஉப் பழீச்சி’ (மதுரைக்-694)
என்றக்கால், வழுத்தி என்பதாம். (85)
377.
கடியென் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை
விரைவே விளக்க மிகுதி சிறப்பே
யச்ச முன்றேற் றாயீ ரைந்து
மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே.
இச்சூத்திரம் என்னுதலிற்றே வெனின், இதுவும் குறிப்பு.
உரை: கடி என்பது இப் பத்துப் பொருளும் படும் என்றவாறு.
வரலாறு :
‘ஊர் கடிந்தார்’
என்றக்கால், ஊரை வரைந்தா