தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1290


 ர் என்பதாம். 

‘வாள்வாய் கடிது’

என்றக்கால், வாள்வாய் கூரிது என்பதாம். 

‘கடி கா’ (களவழி-29)

என்பது, காப்புடைய கா என்பதாம். 

‘கடித் தளிர்’

என்பது, புதுத் தளிர் என்பதாம். 

‘கடிது வந்தார்’

என்றக்கால், விரைந்து வந்தார் என்பதாம்.  

‘கடும் பகல்’ (கலி - நெய்-28)

என்றக்கால், விளங்கு பகல் என்பதாம்.  

‘கடும் புனல்’ (குறுந்-103)

என்றக்கால்,    மிக்க   புனல்   என்பதாம்;   அது   சிறந்த   புனல்
என்பதூஉமாம்.
 

‘கடுங்கண் யானை’

என்றக்கால், அஞ்சத்தக்க யானை என்பதாம்.  

‘கடுஞ்சூ டருகுவன்’ (அகம் -110)

என்றக்கால், முன்னின்று தேற்றந்தருவன் என்பதாம். () 

378. ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே. 

இச்சூத்திரம்    என்னுதலிற்றோ   வெனின்,   இவ்விரு   பொருளும்
படுதற்கும் உரித்து என்றவாறு.
 

வரலாறு:  

‘கடுத்தன ளல்லளோ வன்னை’

என்றக்கால், ஐயுற்றனள் என்பதாம்.  

‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’

என்றக்கால், கரிப்பார் மிளகு தின்ற என்பதாம். (87)  

379. ஐவியப் பாகும். 

வரலாறு : 

‘ஐதே காமம் யானே’ (நற்றினை-143)

என்றக்கால், வியக்கத்தக்கது என்பதாம். (88) 

380. முனைவு முனிவாகும். 

  வரலாறு :  

‘சேற்றுநிலை முனைஇய’

என்றக்கால், சேற்றுநிலை முனிந்த என்பதாம். (89)  

381. வையே கூர்மை. 

  வரலாறு :  

‘வையிலை நெடுவேல்’

என்றக்கால், கூரிலைவேல் என்பதாம். (90) 

382. எறுழ்வலி யாகும். 

வரலாறு :  

‘வாளுடை யெறுழ்த்தோள்’

என்றக்கால், வலியுடைத் தோள் என்பதாம். (91) 

383. மெய்பெறக் கிளந்த வுரிச்சொ லெல்லா
முன்னும் பின்னும் வருபவை நாடி
யொத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்த
றத்த மரபிற் றோன்றுமன்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:36:58(இந்திய நேரம்)