தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1304


 

இவை.
 

இவற்றையும்     அவ்  வுருபு  விரிந்தாங்கே  பொருள்  படுமாறு
அறிந்துகொள்க.    அத்    தொகுதிக்கண்   உருபுகள்   பலவகையும்
புலப்படாதே நின்றன  என்ப ஒரு  சாரார்  ;  ஒரு  சாரார் இல்லை
என்ப. (17)
 

408.

உவமத் தொகையே யுவம வியல.

 

இச்சூத்திரம்    என்னுதலிற்றோ   வெனின்,   நிறுத்த   முறையானே
உவமத்தொகை யுணர்த்துதல் நுதலிற்று.
 

உரை : உவமத் தொகைக்கண் அவ் வுருபு தொக்கு நின்றாலும் அவ்
வுருபு விரிந்தாங்கே பொருள்படும் என்றவாறு.
 

உவமம்   தொகுங்கால்  வினை,   பயன்,   மெய்,   உரு   என்ற
நான்கும்பற்றித் தொகும்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:39:31(இந்திய நேரம்)