தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1305


அதற்கு மெய்யுரை வல்லோர்வாய்க் கேட்டுணர்க. (18) 

409. வினையின் றொகுதி காலத் தியலும்.

உரை :  வினைச்சொல்  தொகுங்கால்,   காலந்தோன்றத்  தொகும்
என்றவாறு. 

‘காலத்தியலும்’  என்றது   எக்காலும்   காலமுடையவாய்   இயலும்
என்றவாறு. 

வரலாறு : கொல் யானை என்பது கொன்ற யானை ; கொல் யானை
--  கொல்லாநின்ற யானை ; கொல் யானை -- கொல்லும் யானை என
மூன்று காலத்திற்கும் அதுவே வாய்பாடு ; பிறிதில்லை. 

மற்றுக்,  கொல்யானை  என்றானேல்,  நிகழ் காலமும் அறியலாம் ;
கொல்லிய   ஒடுவதனைக்   கண்டு,   ‘கொல்   யானை’  என்றானேல்,
எதிர்காலம் என்பது அறியலாம். பிறவும் அன்ன. (19) 

410. வண்ணத்தின் வடிவி னளவிற் சுவையினென்
றன்ன பிறவு மதன்குண நுதலி
யின்ன திதுவென வரூஉ மியற்கை
யென்ன கிளவியும் பண்பின் றொகையே.

உரை :  பண்பு தொகுமிடத்து இந் நான்கும்பற்றித் தொகும் என்பது
கருத்து. 

வண்ணம்பற்றித் தொக்கது : 

கருங் குதிரை  என்பது ;  இது  விரியுங்காலை, கரியது குதிரை என
விரியும். 

கரியதும்  அதுவே,  குதிரையும்  அதுவே  ; கருமை யுடைமையிற்
குதிரை  கரியது  எனப்பட்டது.  இன்னது  இது  என நிற்றல் அதற்கு
இலக்கணம். 

இன்னது என்பது கரியது என்றல் ; இது என்பது குதிரை என்றல். 

இனி, வடிவுபற்றித் தொகுத்தல் : 

வட்டப்   பலகை  என்பது   ;  அது  விரியுங்கால், வட்டமாகியது பலகை   என  விரியும்.  ஆண்டும்  இன்னது  இது  என்னுங் குணம் நுதலி நிற்கும். 

இனி, அளவுபற்றித் தொக்கது : 

குறுங்கோல்  என்பது   ;  அது  விரியுங்கால்,  குறியது  கோல்  என
விரியும். ஆண்டும் இன்னது இது என நிற்கும். 

இனிச்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:39:42(இந்திய நேரம்)