தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1306


சுவைபற்றித் தொக்கது : 

தீங் கரும்பு என்பது  ;  அது  விரியுங்கால்,  தீவியது  கரும்பு என
விரியும். ஆண்டும் இன்னது இது என்னும் குணம் நுதலிற்று. 

இனி,   ‘அன்ன பிறவும்’ என்றதனால், தண்ணீர், நறும்பூ, நன்னுதல்,
பருநூல்,  மெல்லிலை, நல்லாடை என எத்துணையுளமன், அப்பொருள்
குணம்  ;  அக்குணம்  நுதலி இன்னது இது என வருமவை யெல்லாம்
பண்புத் தொகையே யென்று கொள்க என்பதாம். 

இனி,   ‘என்ன கிளவியும்’ என்றதனால், கேழற்பன்றி, வேழக்கரும்பு,
சகரக்கிளவி,  அகரமுதல, மாமரம் என இவையுங் கொள்க. இவை ஒரு
பொருட்கண்  இருபெயர்பட  வரும்.  இவற்றுக்கண்ணும் இன்னது இது
என   நிற்றல்  ஒக்கும்.  கேழல்  எனப்பட்டதுவும்  அதுவே.  பிறவும்
அன்ன. 

மற்று,  வேற்றுமைத்  தொகையும்  உவமத் தொகையும், வேற்றுமை
யுருபும்  உவம வுருபும் தொக்கமையால் தொகை யென்றல் அமையும் ;
ஒழிந்த  வினைத்தொகையும்  அவ்வாறு  தொக்கு நின்றிலவால் எனின்,
அவ்வாறு தொகுதலே யன்று தொகையாவது. 

கொல் யானை   என்புழிக்,   கொல்லும்   என்னும்  வினைச்சொல்
ஒருகூறு நிற்ப, ஒருகூறு தொக்கமையின் வினைத்தொகை ஆயிற்று. 

கருங் குதிரை என்புழிக்,  கரியது  என்னும் பண்புப் பெயர் ஒருகூறு
நிற்ப ஒருகூறு தொக்கமையின் பண்புத் தொகை ஆயிற்று. (20) 

411.  இருபெயர் பலபெய ரளவின் பெயரே
யெண்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:39:53(இந்திய நேரம்)