தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1307


ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி
யெண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங்
கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே.

என்பது,    இவ்வாறிடத்தும்     உம்மை    தொகற்பாலது    என்று
உணர்த்தியவாறு. 

இருபெயர்க்கண் தொக்கது : 

உவாப்   பதினான்கு  என்பது  ; அது  விரியுங்கால்,   உவாவும்
பதினான்கும் என விரியும். 

பலபெயர்க்கண் தொக்கது : 

புலி விற் கெண்டை  என்பது  ; அது விரியுங்கால், புலியும் வில்லும்
கெண்டையும் என விரியும். 

அளவுப்பற்றித் தொக்கது : 

தூணிப்  பதக்கு  என்பது  ; அது விரியுங்கால், தூணியும் பதக்கும் என விரியும். 

எண்ணியற்பெயர்பற்றித் தொக்கது : 

பதினைவர் என்பது  ; அது  விரியுங்கால், பதின்மரும் ஐவரும் என
விரியும். 

நிறைப்பெயர்பற்றித் தொக்கது : 

தொடியரை  என்பது  ;  விரியுங்கால்,  தொடியும்  அரையும்  என
விரியும். 

எண்ணின்பெயர்பற்றித் தொக்கது : 

பதினொன்று என்பது ; அது, பத்தும் ஒன்றும் என விரியும். 

மற்றும், ‘பலபெயர்’ என அமையாதே, ‘இருபெயர்’ என வேண்டியது
என்னை,   இரண்டையும்   பல   என்பவால்  எனின்,  அற்றன்று  ;
இரண்டனையும்  பன்மை யென்று வேண்டான் இவ்வாசிரியன் என்பது.
ஆயின், மேல், 

‘ஒன்றறி சொல்லே பலவறி சொல்’     (தொல். கிளவி - 3)

என்புழி, இரண்டையும் பல என்று வேண்டினானாலெனின், அது
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:40:04(இந்திய நேரம்)