Primary tabs

விகாரம் ; என்னை, இரண்டும் இரண்டிறந்த பன்மையும், ‘வந்தன,
போயின’ என, ஒருபன்மைச் சொல்லே யேற்குமாகலின், ஆண்டு
இரண்டினைப் பலவற்றுள் அடக்கிக் கூறினார் என்பது. (21)
412.
பண்புதொக வரூஉங் கிளவி யானு
மும்மை தொக்க பெயர்வயி னானும்
வேற்றுமை தொக்க பெயர்வயி னானு
மீற்றுநின் றியலு மன்மொழித் தொகையே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேல் நிறுத்த முறையானே
ஒழிந்துநின்ற அன்மொழித்தொகை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : அக் கூறப்பட்ட மூன்று தொகைச் சொல்லீற்றுக்கண்ணே
நின்று நடக்கும் அன்மொழித் தொகை என்றவாறு.
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்தது :
வெள்ளாடை என்பது ; அதனைப் படுத்தலோசையாற் சொல்ல,
வெண்மைமேலும் ஆடைமேலுங் கிடவாது, அவ்வாடை யுடுத்தாள்மேல்
கிடக்கும் என்பது ; அந்நிறை மொழி யோசையன்றிப் பிறிதோர் மொழி
யோசைபட்டுப் பொருள்கொள்ளு மாகலான், அம் மொழி அன்மொழி
யாயிற்று என்பது.
அன்மொழித்தொகை யாயக்காலும் வெளியதாடை என்றே விரியும் ;
பிறிதில்லை.
உம்மைத்தொகைபற்றிப் பிறந்தது :
தகர ஞாழல் என்பது ; அது விரியுங்கால், தகரமும் ஞாழலும் என
விரியும். அன்னதன் றொகைக்கண் ஓசை வேறுபடச் சொல்லத்
தகரத்தின்மேலும் ஞாழலின்மேலும் கிடவாது, அவை யுடையாள்மேல்
கிடக்கும்.
இனி, வேற்றுமைத்தொகை பற்றிப் பிறந்தது :
பொற்றாலி என்பது ; அது விரியுங்கால், பொன்னானாய தாலி,
பொற்றாலி என்பதாம். பிறிதானும் விரியும் ; பின்னர், அத்தொகை
பொன்