Primary tabs

த் தொகைச் சொற்கள் தொகுவது தொக்கு நின்றக்கால், தம்மீறு
கருதின பொருட்கேற்கும் முடிவினை நின்றாங்கே நின்று கொள்ளும்;
இதுவாயின் இறுதி நின்றாங்கே நிற்பப் பொருட்கேற்ப முடிபு
ஏலாமையான், இறுதிபோதல் வேண்டிற்று என்பது. (25)
416.
வாரா மரபின வரக்கூ றுதலு
மென்னா மரபின வெனக்கூ றுதலு
மன்னவை யெல்லா மவற்றவற் றியலா
னின்ன வென்னுங் குறிப்புரை யாகும்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேல் தொகை யதிகாரங்
கூறினான்; அவை யெல்லாம்விட்டு, இனி ஒரு சொன்மரபு
வழூஉக்காத்தல் நுதலிற்று.
உரை :
இயங்காதவற்றை இயங்குவதுபோலச் சொல்லுதலும்,
சொன்னிகழாதவற்றைச் சொன்னிகழ்த்துவன போலச் சொல்லுதலும்,
அவ்வப் பொருளியல்பு பற்றி அவை அன்ன
செய்கையுடைவற்றைப்போலச் சொல்லலுற்றான்; அது மனக்
குறிப்பினான் ஆய்ந்து, அவற்றது உரை அன்று என்பது கொள்க.
‘அன்னவை எல்லாம்’ என்பது, அவ்வாராமரபினவும் பல்வகைய,
ஒரோவென்றேயல்ல என்றற்கு என்பது.
வாராமரபின வரக்கூறுதல் வருமாறு:
மலை வந்து கிடந்தது, நெறி வந்து கிடந்தது என வரும்; மலைக்கும்
நெறிக்கும் அன்ன செய்கை யின்றாகலின் என்பது.
இனி, என்னாமரபின எனக்கூறுதல் வருமாறு:
நிலம் வல்லென்றது, இலை பச்சென்றது எனவும், செங்கானராய்
எனவும் வரும்.
விலங்கும் மானும் புள்ளும் உள்ளநோய் உற்றாற்கு மனக்குறைக்கு
மறுதலைமாற்றம் கூறுவன போலுங் குறிப்பினவாகப் புலப்படுதலால் இது
சொல்லப்பட்டது என்பது. (26)
417.
இசைபடு பொருளே நா