தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1313


ன்குவரம் பாகும். 

418. விரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும். 

இவை    இரண்டு     சூத்திரமும்     உரையியைபு     நோக்கி
யுடனெழுதப்பட்டது. 

இச்சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,   மேல்,    இசைநிறை,
அசைநிலை,  பொருளொடுபுணர்தல்  என்றவை மூன்றென்ப ஒருசொல்
அடுக்கு;  என்புழி  மூன்று  வகையான்  அடுக்கிவரப்பெறும் என்றவை
எல்லையின்மையான், அவையித்துணை யென்னும் வரையறை கூறினார்
ஈண்டு என்பது. 

உரை : அம் மூன்றனுள் இசைநிறைத்தற்கு அடுக்கப்படும்  பொருள்
நான்கு வரம்பாகும் என்றவாறு. 

இரண்டும்  அடுக்கும்,  மூன்றும்  அடுக்கும்,  நான்கும்  அடுக்கும்,
நான்கிறந்து அடுக்கா என்பது கருத்து. 

அது, 

‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’ என வரும். 

இது,  நான்கு  அடுக்கின   வந்தது,   இசைநிறையெனவே,   அது
செய்யுட்கென்பது முடிந்தது. 

இனி, அம் மூன்றுடன் பொருளொடு புணர்தலை விரைசொல்லடுக்கு
என்பது.  அதுதான்  மூன்று  வரம்பு இறவாது என்பது. ‘பாம்பு, பாம்பு,
பாம்பு, ‘தீத் தீத்தீ’ என வரும்; இரண்டு மூன்றிறவாது. 

மற்று,  அசைநிலை  யினைத்தால்  அடுக்கும்   என்பது   எற்றாற்
பெறுதும்  எனின்,  மூன்றடுக்கும்  பொருளொடு  புணர்தலை முற்கூறற்
பாலார்,  என்னை,  மூன்று நான்கு என்னும் எண்ணுமுறைமை நோக்கி;
அவ்வாறு  சொல்லாது மயக்கங் கூறியவதனான், மூன்றின் கீழ்க்குமுதல்
இரண்டல்லது  இல்லையன்றே;  அவ்விரண்டெண்ணின் நான்காகப்படும்
அசைநிலை என்பது கொள்கஎனறவாறு, 

வரலாறு : ‘மற்றோ மற்றோ’ ‘அஃதே அஃதே’ என வரும். 

இரண்டிறவாது     என்பதனை     இலேசிணாற்     கொண்டார்,
இடைச்சொல்லடுக்காதலி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:41:10(இந்திய நேரம்)