தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1314


ன் என்பது. ஒழிந்த, நால்வகைச் சொல்லும் அடுக்கும். (27 - 28) 

419. கண்டீ ரென்றா கொண்டீ ரென்றா
சென்ற தென்றா போயிற் றென்றா
வன்றி யனைத்தும் வினாவொடு சிவணி
நின்றவழி யிசைக்குங் கிளவி யென்ப.
 

இச்சூத்திரம்  என்னுதலிற்றோ    வெனின்,    இவை    வினையிய
லொழித்துநின்ற ஒழிபு கட்டுரை யெடுத்தது. 

வினைச்சொற்கள், இங்ஙனம், வினாவொடுபட்டு  நின்றவழியாயக்கால்
அசைச்சொல்லாய்நிற்கும் என்பதுகருத்து. 

வரலாறு : 

‘கண்டீரோ, கண்டீரோ’

‘கொண்டீரோ, கொண்டீரோ’ 

‘சென்றதே, சென்றதே’ 

‘போயிற்றே, போயிற்றே’ 

என  வினாவொடுபட்டவழி   அடுக்கி   அசைநிலையாய்    நிற்கும்.
அவ்வினாவொடு    சிவணாக்கால்   வினைச்சொல்லேயாம்   என்பது.
‘அன்றியனைத்தும்’   என்பது,  அவையிற்றைத்  தொகை  கொடுத்துக்
கூறினவாறு. 

‘வினாவொடு  சிவணி’  என்பது, ஆ ஓ  என்னும்  வினாக்களைக்
கடையாத்து நின்றவழி என்றவாறு. (29) 

420. கேட்டை யென்றா நின்றை யென்றா
காத்தை யென்றா கண்டை யென்றா
வன்றி யனைத்து முன்னிலை யல்வழி
முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே.
 

இச்சூத்திரம்     என்னுதலிற்றோ  வெனின்,  இவை  முன்னைய
நான்கும்போல   வினாவொடுபடாது   வாளாதே  நின்றுழி,  இவையும்
அசைச்சொல்லாய் நிற்கும் என்பது கருத்து. 

முன்னின்றவற்று நிலைமையல்வழி யென்பார்,  ‘முன்னிலை  யல்வழி’
என்றார் என்பது. 

வரலாறு : 

‘கேட்டை, கேட்டை’ 

‘நின்றை, நின்றை’ 

‘காத்தை, காத்தை’ 

‘கண்டை, கண்டை’ 

என வரும். இவையும் கட்டுரைக்கண் வருமிடம் அறிந்து கொள்க. 

இனி,  இவை  வினாவொடு   பட்டுழியாயக்கால்   அசைநிலையாகா
என்பது. (30) 

421. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:41:21(இந்திய நேரம்)