Primary tabs

றச்
சிறப்புடை மரபி னம்முக் காலமுந்
தன்மை முன்னிலை படர்க்கை யென்னு
மம்மூ விடத்தான் வினையினுங் குறிப்பினு
மெய்ம்மை யானு மிவ்விரண் டாகு
மவ்வா றென்ப முற்றியன் மொழியே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை வினையியலுள்
ஓதப்பட்டன சில சொற்கள், முற்றுச்சொல் என்னும் குறிபெய்துதல்
நுதலிற்று.
அதனாற் பயந்தது என்னை யெனின், அச் சொற்கு முன்பு
முடிபுகூறி, ஈண்டுக் குறியிட்டான் என்பது பயன் என்பது.
இதன் பொழிப்பு : இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும்
மூன்றுகாலமும் உடையவாய்த், தன்மை முன்னிலை படர்க்கை
யென்னும் மூன்றிடத்தும் வினையும் வினைக்குறிப்பும் பற்றி, அம்
மூன்றிடங்கடோறும் வினையும் வினைக்குறிப்பும் என இரண்டாம்
அவ்வறுகூற்றுச் சொற்களை முற்றுச்சொல் என்று கூறுப ஆசிரியர்
என்றவாறு.
‘அவ் வாறு’ என்றது, தன்மை இரண்டுகுப்பையவாயும், முன்னிலை
இரண்டுகுப்பையவாயும், படர்க்கை இரண்டுகுப்பையவாயும் வருதல்
நோக்கி என்பது.
வரலாறு : ‘உண்டேன், கரியென்’ எனவும் ; ‘உண்டாய், கரியை’
எனவும் ; ‘உண்டான், கரியன்’ எனவும் வரும். பிறவும் அன்ன.
‘முற்றுச்சொல்’ என்றது. செய்கையும் பாலும் காலமும்
செயப்படுபொருளும் தோன்றிநிற்றலின் முற்றுச்சொல் என்பாரும்,
மற்றோர்சொல் நோக்காது முடிந்து நிற்றலின் முற்றுச்சொல் என்பாரும்,
எக்கால் அவை தம் எச்சம்பெற்று நின்றன அக்கால் பின் யாதும்
நோக்காவாய்ச், செப்புமூயிற்றுப்போல, அமைந்து மாறுதலின்
முற்றுச்சொல் என்பாரும் என இப்பகுதியார் ஆசிரியர் என்ப