Primary tabs

வரும். உண்ணும் உண்ட என்பன பெயரெச்சம் ; மற்று இது
கூறவேண்டிய தென்னை?
‘நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும்’
(தொல். வினை-35)
பெயர்கொண்டு முடிதல் கூறப்பட்டது பிறவெனின், அதற்கு விடை,
ஆண்டு வினைமுதற் கிளவியும் வினையும் எனவே, வினைச்சொல்லும்
முடியும் என்பது பட்டது என்றது. வினைமுதற்கிளவி என்றக்கால்
வினை வினைமுதலும் வினைமுதலாகலானும், இனி வினை
யென்றக்கால் வினைப் பெயரேயன்றி வினைச்சொல்லுமாகலானும் இச்
சூத்திரம் வேண்டும் என்பது.
(37)
428. ஒழியிசை யெச்ச மொழியிசை முடிபின.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே
ஒழியிசையெச்சம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : ஒழியிசை யெச்சமாவன மூன்று, அவை, மன்னை
ஒழியிசையும், தில்லை ஒழியிசையும், ஓகார ஒழியிசையும் என ; அவை
மூன்றும், ஒழியிசைப் பொருள் கொண்டு முடியும் என்றவாறு.
வரலாறு :
‘கூரியதோர் வாண்மன்’
வாய் கோடிற்று. இற்றது எனப் பின்னும் வாள்மேலே முடிபு
சென்றது.
இனி,
‘வருகதில் கொண்கன்’
என, வருக எனப்பட்டானும் அவனே, கொண்கன் எனப்பட்டானும்
அவனே ; அதனால், அதுவும் அப் பொருள்கொண்டு முடிந்தது.
இனிக்,
‘கொளலோ கொண்டான்’
என்புழிக், கொளலோ எனப்பட்டானையே கொண்டான் என்பது.
அதனால், அதுவும் அவ் வொழியிசைப் பொருள்கொண்டு
முடிந்தது. (38)
429. எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடிபின.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே
எதிர்மறையெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : எதிர்மறை யெச்சம் என்பன இரண்டு, ஓகார எதிர்மறையும்
உம்மை யெதிர்மறையும் என ; அவை, அவைதம் எதிர்மறைப்
பொருள்கொண்டு முடியும் என்றவாறு.
வரலாறு : ‘யானோ கொண்டேன்’ என்பது ; யானோவன்றே
கொண்டேன் என்றாலும், அதனால் அப்