Primary tabs

பொருள் கொண்டு முடிந்தது எனப்படும். ‘நீயே கொண்டாய்’
என்றாற்கு எதிர்மறுத்தவாறு, ‘யான் கொண்டிலேன்’ என என்பது.
இனி, உம்மையெதிர்மறை, ‘வரலும் உரியன்’ என்பது. ஆண்டு,
‘வரலும்’ எனப்பட்ட உம்மை யெதிர்மறை, உரியன் எனப் பின்னும்
அவனையே கொண்டுமுடிந்தது. வாராமையும் உரியன் என்பதற்கு
எதிர்மறை, அவை ஒன்றொன்றனை நோக்க எதிர்மறை
யென்றவாறாயிற்று. (39)
430.
உம்மை யெச்ச மிருவீற் றானுந்
தன்வினை யொன்றிய முடிபா கும்மே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது முறையானே
உம்மையெச்சத்திற்கு முடிபுகூறுதல் நுதலிற்று.
உரை : உம்மை யெச்சம் என்பது எச்சவும்மையாயிற்று;
‘இருவீற்றானும்’ என்றது, தானும் தன்னாற்றழுவப்பட்டதுவுமான
இரண்டனையும் ஆயிற்று; அவையிரண்டும் ஒன்றிய வினையே
கொண்டுமுடியும் என்றவாறு.
வரலாறு : ‘சாத்தனும்வந்தான்’ என்றக்கால், பின்னைக் கொற்றனும்
வந்தான் என்றானும், கொற்றனும் வரும் என்பதானும்
ஒன்றியவினையே கொண்டு முடிக என்பது; ‘சாத்தனும் வந்தான்’
என்றக்கால், ‘கொற்றனும் போயினான்’ என்றுவிடின் அமையாது
என்பதாம். (40)
431.
தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை
நிகழுங் காலமொடு வாராக் காலமு
மிறந்த காலமொடு வாராக் காலமு
மயங்குதல் வரையார் முறைநிலை யான.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இஃது
அவ்வெச்சவும்மையது மயக்கங் கூறுதல் நுதலிற்று.
உரை: தன் என்பது எச்ச வும்மை; செஞ்சொல் என்பது உம்மையில்
சொல்; எச்சவும்மைச் சொல்லின்மேல் உம்மையில்சொல் வந்தக்கால்
நிகழ்காலமும் எதிர் காலமும் மயங்கும், இறந்தகாலமும் எதிர்காலமும்
மயங்கப்படும் முறை யிலக்கணமாகலான் என்பது.
வரலாறு : ‘கூழு