Primary tabs

பட்ட மூன்றனுள், ஈ என்னுஞ்சொல் இரக்கப்படுவோரை இழிந்தோர்
கூறி யிரக்குஞ்சொல் என்றவாறு.
வரலாறு : ‘உடுக்கை ஈ’, ‘மருந்து ஈ’ எனவரும். (49)
440. தாவென் கிளவி யொப்போன் கூற்றே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இரக்கப்படுவானை ஒப்பான்
இரக்குங்கால் தா என்னுஞ் சொற் சொல்லி இரக்கும் என்பது
உணர்த்தியவாறு.
வரலாறு : ‘சோறு தா’, ‘ஆடை தா’ எனவரும். (50)
441. கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், கொடு என்னுஞ் சொல்
உயர்ந்தோனாற் கூறப்படுஞ் சொல் என்றவாறு.
வரலாறு : ‘இவற்கு ஊண் கொடு, ஆடை கொடு’ என வரும். (51)
442.
கொடுவென் கிளவி படர்க்கை யாயினுந்
தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பிற்
றன்னிடத் தியலு மென்மனார் புலவர்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேற் கூத்திரத்துக்குப்
புறனடையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : கொடு என்றது தன்மைக்கு ஏற்றதன்று, படர்க்கைக்கு
உரியதோர் சொல்லாயிற்று ; உயர்ந்தோன் இழிந்தோனை யிரக்குங்கால்,
தமனொருவனைக் காட்டி, இவற்குக்கொடு, என்பது ; ஆண்டுப்
படர்க்கையிடத்திற்கு உரித்தாகக் கூறினான்மன் ; ஆயினும், அது
தன்மையிடத்தே யியல்பு காட்டப் படர்க்கையிடத்தாற்கு உரித்தாகாது
அவ்விரக்கப்படு பொருளும் அக்கொடு என்ற சொல்லும் என்பது.
தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பில் தன்னைக் கொடு என்றது
வாய்பாடென்றதேனும் அது தனக்கே சொல்லியவாறு.
உம்மையாற் பிறகிளவியும் படர்க்கையாயினும் தன்னைப் பிறன்போற்
கூறுங்குறிப்பிற் றன்னிடத்து இயலும் என்றவாறு ; ஆண்டு
இரவின்கிளவி யல்வழி யென்பது. ‘அங்ஙனஞ் சொல்லுவானோ
பெருஞ்சாத்தன் தந்தை, சொல்லப்படுவாளோ பெருஞ் சாத்தன் தாய்’
என்னும் தன்னைப் பிறன் போல்வானும் ; அது தன்னிடத்து இயலும்
என்றவாறு. (52)
443.
பெயர்நிலைக் கிளவியி னாஅ குநவுஞ்
சினைநிலைக் கிளவி