தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1325


யி னாஅ குநவுந்
தொன்னெறி மொழிவயி னாஅ குநவு
மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவு
மந்திரப் பொருள்வயி னாஅ குநவு
மன்றி யனைத்துங் கடப்பா டிலவே.

இச்சூத்திரம்    என்னுதலிற்றோ  வெனின்,  ஒருசார்  வழுக்காத்தல்
நுதலிற்று. 

உரை :  இவை   மேற்   கூறப்பட்ட   இலக்கணத்தினை   யன்றி
யாகாமையில என்றவாறு. 

‘பெயர்நிலைக்கிளவியின்’  என்பது,  ஈண்டு  உயர்திணைப் பெயரை
யாயிற்று.    அவ்வுயர்திணைப்பெயர்    உயர்திணைப்    பெயர்மேல்
வழங்கப்படுதலின்றியும்    அமையுமென்றவாறு.    நம்பி    என்னும்
உயர்திணைப்பெயர்  ஒரு  யானை மேலானும், ஒரு கோழி மேலானும்,
பிறவற்றின்   மேலானும்  நிற்கும்.  நங்கை  என்ப  ஒரு  கிளியையும்
என்பது. 

இனிச், சினைநிலைக் கிளவியினாவன கடப்பாடின்றி வருமாறு : 

‘வெண்கொற்றப் படைத்தலைவன்’ 

‘வெள்ளேறக் காவிதி’ 

என்பன. 

இவற்றை   முன்னர்க் கிளவியாக்கத்துச்  சிறப்புப்பெயர்  நின்றவழி
இயற்பெயர்  வைத்துக்கூறுப என்றார் ; இனிச் சினைச் சொற்கணாயின்
அது வேண்டுவதன்று என்பது கருத்து. 

‘தொன்னெறி  மொழிவயி  னாஅ குநவும்’  என்பது முற்றுச்சொல் ;
அவற்றையும்  இவ்வாறே  சொல்லப்படுதலின்  இப்பொருள  என்றோர்
கடப்பாடில என்றார். 

வரலாறு: ‘ஆற்றுட் செத்த வெருமை ஊர்க்குயவற் கிழுத்தல் கடன்’
எனவும்,  ‘யாட்டுளா  னின்னுரை  தாரான்’  எனவும்  வரும்.  பிறவும்
அன்ன. 

‘மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவும்’ என்பது, மேல், 

‘தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும்’
                        (தொல். சொல். கிளவி - 17)

என்புழி,    மங்கல    மரபினானும்    குழூவின்வந்த    குறிநிலை
வழக்கினானும்  கூறப்படுமொன்றாரன்றே, இனி, அவை அவ்வாறன்றித்
தத்தம் இலக்கணத்தானுஞ் சொல்லப்படும் என்றவாறு. 

வரலாறு  :  சுடுகாட்டை  நன்காடு  என்னாது  சுடுகாடு  என்றும்,
செத்தாரைத்   துஞ்சினார்   என்னாது   செத்தார்  என்றும்  கூறவும்
அமையும் என்றவாறு. 

இனி,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:43:23(இந்திய நேரம்)