Primary tabs

ழான் என்பன ; அக்காலத்து அவை யுண்மையான் ஆசிரியன் ஓதி
முடிபு கூறப்பட்டன.
இனிச், சுட்டுச்சினை நீடிய ஐகாரவீற்றப் பெயர் (தொல். எழுத்து.
தொகைமரபு - 17) உறழ்ந்து முடிக என்றான் ஆசிரியன், அக் காலத்து
அவை யுண்மையான் ; இப்பொழுது அவற்றிற்கு உதாரணமில்லை.
பிறவும் அன்ன.
இனி, ஆசிரியனால் ஆகா என ஓதப்பட்டன தோன்றுவ உள ;
அவை, ஞண்டு என்றும், நீர்கண்டக என்றும், சம்பு, சள்ளை என்றும்
வரும். (56)
447.
குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்
குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், செய்யுட்கு ஆவதோர்
முடிபு கூறுதல் நுதலிற்று.
உரை : முன் செய்யுளீட்டம் தன்மையானே கடியப்படுமென்றே
யறியக்கிடந்தது ; இனி, அவற்றை முழுவதூஉங் கிடை கடாவாது
குறைத்துக் கடாவப்படுதலும் உடைய ஒரோவழி, அங்ஙனங்
குறைக்கப்பட்டதேனுங் குறையாது நின்றவிடத் தியலுமாறே புலப்பட்டு
இயலுஞ் செவிக்கு என்றவாறு.
இனி, அவை குறைக்குமிடத்துத், தலைக்குறைத்தலும்
இடைக்குறைத்தலும் கடைக்குறைத்தலும் என மூன்று வகையாற்
குறைக்கப்படும் என்பது.
அவற்றுள் தலைக்குறைத்தது :
‘மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி’
என்பது ; ஆண்டுத் தாமரை எனற்பாலார் மரை என்று
தலைக்குறைத்தார் என்பது.
இடைக் குறைத்தல் என்பது :
‘வெரிநி னோதி வெருக்கண் டன்ன’
என்பது ; ஆண்டு, ஓந்தி எனற்பாலார் ஓதி என்று
இடைக்குறைத்தார் என்பது.
இனிக் கடைக்குறைத்தல் என்பது :
‘நீலுண் டுகிலிகை கடுப்ப’
என்பது ; நீலமுண் டுகிலிகை எனற்பாலார், நீலுண்டுகிலிகை என்றார்
என்பது.
‘குறைக்கும்வழி யறிதல்’ என்பது, குறைக்கைக்குத் தகக்
குறைக்கப்படுவது என்றற்கு என்பது.
‘நிறைப்பெயரியல’ எனவே, இவ்விகாரம்