Primary tabs

து. (60)
451. உரையிடத் தியலு முடனிலை யறிதல்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உலகத்து மாறுகொண்டு
வேறுபட்டியலுஞ் சொற்களவை அமைக என்பது உணர்த்துதல்
நுதலிற்று.
உரை : கட்டுரை யுரைக்குமிடத்து நடக்கும் ஒருங்கு நிலையும்
என்றவாறு.
ஒன்று உரைக்கு மிடத்து இயைபில்லாத இரண்டு சொல்
ஒருபொருட்கண் நிற்பச் சொல்லுதலுண்டு, உண்டேனும் அஃது அமைக
என்றவாறு.
வரலாறு: ‘இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது’ என்பது ; சிறிதென்ற
சொல்லும் பெரிதென்ற சொல்லும் தம்முண் மாறுகோளுடைய அந்நாழி
மேலே நின்றனவேனும் அமையும் என்பது. என்னை
அமையுமாறெனின், சிறிது என்று நின்றதன் சிறுமையே பெரிதென்பான்
சொல்லினானல்லன், அந் நாழிக்கு இந்நாழி பெரிய துணை
மிகுதியில்லை, பெருமை சிறிதெண்ணிய சொல்லினான் ; அமையும்
என்பது. (61)
452.
முன்னத்தி னுணருங் கிளவியு முளவே
யின்ன வென்னுஞ் சொன்முறை யான.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் சொற்கண்ணதோர்
பொருள்படுதல் வேற்றுமை யுணர்த்துதல் நுதலிற்று.
உரை : சொல்லினவிடத்துச் சொற்கிடந்தவாறே குறிப்பினாற்கொண்டு
உணரப்படும் பொருளும்உள; சொற்களதியாண்டாயினும் மற்று
இன்னவென்று தன்மை வேறுபாடு சொல்லுதன் முறைக்கண் என்றவாறு.
வரலாறு :
‘செஞ்செவி வெள்ளோக்கலர்’
எனவும்,
குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர்’
எனவும் வரும்.
செஞ்செவி வெள்ளொக்கலர் என்றால், உதிரஞ் சொரியுஞ் செவியர்,
வெளிய சுற்றத்தார் என்பது அன்று ; செவியெல்லாஞ் சாலச்செம்பொன்
அணிந்து, முட்டில் செல்வத்தாக்கினையுடையர் என்றவாறு.
‘குழைகொண்டு கோழி