தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1331


யெறியும்’    என்றக்காலும்,    கோழியெறிதலென்று    உணரற்பாலது,
முட்டில் செல்வத்தார் என்பது உணரற்பாற்று. (62) 

453. ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார். 

இச்சூத்திரம்    என்னுதலிற்றோ    வெனின்,   இதுவும்   மரபுவழுக்
காத்தது. 

உரை : ஒரு பொருண்மேற்  கிடந்த  இருசொற்  பிரிவின்றிநின்றன
வரையப்படாது என்றவாறு. 

வரலாறு : 

‘வையைக் கிறைவன் வயங்குதார் மாணகலந்
தையலா யின்றுநீ நல்குதி நல்காயேற்
கூடலார் கோவெடு நீயும் படுதியோ
நாடறியக் கவ்வை யொருங்கு’
 

வையைக்கு   இறை   யெனப்பட்டானும்,   கோ   எனப்பட்டானும்
அவனாதலால்,  அவ்விருசொல்லும் ஒரு பொருட்கண் மேலே நின்றன ;
பிறபொருட்குப் பிரியா, அங்ஙனம் நிற்பன அமையும் என்பதாம். 

இனிப், ‘பிரிவில வரையப்படா’ எனவே, பிரிவுடையன வரையப்படும்
என்பதாம் ; அஃதியாதோ வெனின், 

கொய்தளிர்த் தண்டலைக் கூற்றப் பெருஞ்சேந்தன்
வைகலு மேறும் வயக்களிறே -- கைதொழுதேன்
காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ்
சாலேகஞ் சார நட’
 

இதனுள்,   ‘கூற்றப்பெருஞ்   சேந்தன்’  என்றார்,  பின்னைக் ‘காலேக
வண்ணன்’   என்றார்   ;   அவை  யிரண்டு  சொல்லும்  பிரிவுடைய,
அதனான்  அமையா ; யாவோ பிரிவெனின், ‘காலேகவண்ணம்’ என்பது
சாந்து,   கூற்றப்பெருஞ்   சேந்தற்கே   யுரித்தாய்  நிற்பதொன்றன்று.
‘காலேகவண்ணம்’     என்னுஞ்    சாந்து    பூசினார்க்    கெல்லாங்
காலேகவண்ணர்  என்று பெயராம், அதனாற் பிரிவுடைத்து ; ஆதலால்,
அமையாது என்பது. 

மேற் கிளவியாக்கத்து,

‘இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும்’
                        (தொல். சொல். கிளவி - 38)
 

என்றும், 

‘சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு’
                        (தொல். சொல். கிளவி - 41)
 

என்றும், 

‘ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி’
                        (தொல். சொல். கிளவி - 42)
 

என்றும்  ஒருபொருண்மேல்  இருபெயர் வழுவும், பல பெயர் வழுவும்
கூறிப் போந்தான் ; அவ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:44:31(இந்திய நேரம்)