Primary tabs

ற்றோடிதனிடை வேற்றுமை தெரிந்துகொள்க. (63)
454.
ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக் காகு மிடனுமா ருண்டே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் பால்வழு
அமைக்கின்றது.
உரை : ஒருமை சுட்டி நின்ற பெயர்ச் சொல்லும் பன்மைகொண்டு
முடியும் இடனும் உடைத்து என்றவாறு.
வரலாறு :
‘அங்கலுழ் மாமெ யகுதை தந்தை
யண்ணல் யானை யடுபோர்ச் சோழர்’
என வரும்.
இதனுள், ‘தந்தை’ எனநின்ற ஒருமை முறைப்பெயர், ‘சோழர்’
என்னும் பன்மைகொண்டு முடிந்தமையின், வழூஉவேயெனினும்
அமையும் என்பது ;
‘யானெம் மூர்புகுவல்’
என்பதும் அது. (64)
455.
முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே
யாற்றுப்படை மருங்கிற் ‘போற்றல் வேண்டும்.’
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது செய்யுட்கு உரியதோர்
முடிபு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : முன்னிலை சுட்டிய வொருமைச் சொல் பன்மைகொண்டு
முடியினும் வரைந்து மாற்றப்படாது ஆற்றுப்படைச் செய்யுளிடத்து,
அதனை ஆண்டுப் போற்றியுணர்க என்றவாறு.
‘கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ’
(மலைபடுகடாம் - 50)
என்புழித், ‘தலைவ’ என்பது ஒருமைப் பெயர் ; அது, பின்னை,
‘ஒருவி ரொருவி ரோம்பினிர் கழிமின்’ (மலைபடுகடாம்-218)
எனப் பன்மைகொண்டு முடிந்தது. முடிந்ததே யெனினும் அமைக
என்பது ; மற்று இதுவும் ஒருமைப்பெயர் பன்மைகொண்டு
முடிதலொக்குமாகலின், முன்னர்,
‘ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி’
(தொல். சொல். எச்ச-64)
என்னுஞ் சூத்திரத்துள் அடங்கும் பிறவெனின், அற்றன்று, முன்
செய்யுணோக்கிச் சொல்லினார் அல்லர் ; இனிச் செய்யுள் நோக்கிச்
சொல்லினார். எங்ஙனம்? முன்னிலையொருமை பன்மைகொண்டு
முடிதல் ஆற்றுப்படைச் செய்யுட்கு முன்னிலைக் கட்டுரை
பயின்றமையினும் மேலதனைக்கொண்டும் அச்செ