தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   475


னை உணரநின்றவழி எழுத்து எனப்படும்; தான் இடை நின்று பொருள்
உணர்த்தியவழிச்  சொல் எனப்படும்,’  என்றுங் கூறினார், இக்கருத்தே
பற்றி. 

இனிச்  சேனாவரையர்  ‘சொல் பொருள் குறித்து வரும்,’ என்றாரா
லெனின்,  ஒருவன் பொருட்டன்மையை உணர்தற்குச் சொல் கருவியாய்
நிற்றலன்றித்  தனக்கு  ஓர்  உணர்வின்மையின் தான் ஒரு பொருளைக்
கருதி நிற்றல் இன்றென மறுக்க. 

அச்சொல்லை   எட்டு   வகையானும்  எட்டிறந்த பல வகையானும்
உணர்த்துப.  இரண்டு  திணையும்,  ஐந்து  பாலும், எழுவகை வழுவும்,
எட்டு வேற்றுமையும்,  ஆறு ஒட்டும், மூன்று இடமும், மூன்று காலமும்,
வழக்குஞ்  செய்யுளும்  ஆகிய  இரண்டிடமும்  என  எட்டுவகையான்
உணர்த்துப.  இனி, எட்டிறந்த பல வகையாவன, சொல் நான்கு வகைய
என்றலும்,   அவற்றையே   பலவாகப்  பகுத்தலும்,  விகார  வகையும்,
பொருள்  கோள்  வகையுஞ்  செய்யுட்கு  உரியசொல் நான்கென்றலும்,
பிறவுமாம். 

அச்சொற்றான்,    தனிமொழியும்    தொடர்மொழியும்    என
இருவகைப்படும். தனிமொழி பொருள் விளக்குமாறு, 

‘நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்.’

(89) 

என்னும் மரபியற்சூத்திரத்தான் உணர்க. 

தொடர்மொழி,  இருமொழித்தொடரும் பன்மொழித்தொடரும்  என
இரு   வகைப்படும்.   அவை   தொடருங்காற் பயனிலை வகையானும்
தொகைநிலை வகையானும் எண்ணுநிலை வகையானும் தொடரும். 

(எ-டு.) சாத்தன், உண்டான்,
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:13:43(இந்திய நேரம்)