தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   476


மன், நனி என்பன தனி மொழி

சாத்தன் வந்தான்-இது பயனிலைத் தொடர்.

யானைக்கோடு-இது தொகைநிலைத் தொடர்.

நிலம் நீர்-இஃது எண்ணுநிலைத் தொடர். இவை இருமொழித்
தொடர். 

‘அறம்வேண்டி  அரசன்  உலகம்  புரக்கும்,’  என்பது பன்மொழித்
தொடர். 

வழுக்  களைந்து  சொற்களை அமைத்துக்கோடலின், இவ்வோத்துக்
கிளவியாக்கம்  என்னும் பெயர் பெற்றது. இனிச் சொற்கள் பொருள்கள்
மேல்  ஆமாறு  உணர்த்தினமையின்  கிளவியாக்கம்  என்னும் பெயர்
பெற்றது  என்றுமாம்:  ‘ஒருவன்மேல் ஆமாறு இது; பலர்மேல் ஆமாறு
இது; ஒன்றன்மேல்  ஆமாறு இது; பலவற்றின் மேல் ஆமாறு இது; வழு
ஆமாறு  இது;  வழு  அமையுமாறு  இது  -  எனப் பொருள்கள்மேல்
ஆமாறு உணர்த்தினமையின். 

இனி  இத்தலைச்  சூத்திரம்  சொல்லும்  பொருளும்  வரையறுத்து
உணர்த்துகின்றது. 

இதன் பொருள்: மக்கட்சுட்டே - மக்களாகிய  நன்கு மதிக்கப்படும்
பொருளை,   உயர்திணை  என்மனார் - உயர்திணை  என்று  கூறுவர்
தொல்லாசிரியர்;   அவர்  அல  பிறவே -  அம்மக்கள் அல்லாத பிற
பொருளை,  அஃறிணை  என்மனார்  -  அஃறிணை எ ன்று  கூறுவர்
தொல்லாசிரியர்;  ஆயிரு  திணையின்  இசைக்கும்  மன்  சொல்லே -
அவ்விருதிணைப் பொருள்களையும் உணர்த்தும் சொற்கள் என்றவாறு. 

ஏகாரம்   மூன்றும்   ஈற்றசை.   இனைத்தென   அறிந்த  உம்மை,
விகாரத்தான் தொக்கது. 

‘இசைப்பு  இசையாகும்,  என்றதனான், இசைப்பு ஒலிக்கும் என்னும்
பொருள்  தந்தது  எனின்,  சொல்லுக்குப்  பொருள்   உணர்த்தும்வழி
அல்லது 

ஒலித்தல் கூடாமையின், ‘உணர்த்தும்’ என்னும் தொ
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:13:54(இந்திய நேரம்)