Primary tabs

ழிலினை ‘இசைக்கும்’;
என்னும் தொழிலினான் கூறினார். இதுவும் ஒரு
மரபு வழுவமைதி. பொருளை உணர்த்துவான் ஒரு சாத்தனே எனினும்,
அவற்கு அது கருவியாக
அல்லது உணர்த்தலாகாமையின்,
அக்கருவிமேல் தொழிலேற்றிச் ‘சொல் உணர்த்தும்’. என்று
கருவிக்கருத்தாவாகக் கூறினார்.
இவ்வாசிரியர் எவ்விடத்தும்
சொல்லைக் கருவிக்கருத்தாவாகக் கூறுமாறு மேலே காண்க. அஃது,
‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (157)
என்றாற் போல்வது.
இச்
சூத்திரத்தாற் ‘பொருள் இரண்டு;
சொல் இரண்டு,’ என
வரையறுத்தார்.
‘உயர்திணை’ என்பது, ‘உயர்ந்த ஒழுக்கம்’ என இறந்தகால வினைத்
தொகை. அஃது ஆகுபெயராய் அப்பொருளை
உணர்த்தி நின்றது.
இதனைப் பண்புத்தொகை என்பாரும்
உளர். அது பொருந்தாது.
என்னை? இது காலந் தோன்றிநிற்றலின்.
‘மக்கட்சுட்டு’ என்பது,
‘மக்களாகிய சுட்டு’ என இரு பெயரொட்டுப்
பண்புத்தொகை. சுட்டு - நன்கு மதிப்பு. அஃது ஆகுபெயராய் மக்கட்
பொருளை உணர்த்தி நின்றது. சேனாவரையர்
இதனைப் பண்புத்
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்றாராலோ வெனின்,
இருபெயரொட்டாகுபெயர்க்கும் அன்மொழித்தொகைக்கும் வேறுபாடு
உணராமற் கூறினமையின் அது பொருந்தாது;
‘என்னை வேறுபாடு?’
எனில், ஈண்டு ஆகுபெயராய் நின்ற
நன்குமதிக்கும் பொருளும்
மக்களையே உணர்த்திநிற்கும். அன்மொழித்தொகை
அவ்வாறன்றி,
‘வேள்ளாடை’ என்றால் வெண்மையும் ஆடையுமன்றி உடுத்தாளையே
உணர்த்திநிற்கும். இது தம்முள் வேற்றுமை.
‘அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும்’ (419)
என்புழி, ‘வெள்ளாடை’ என்புழித்
தொக்க இருமொழி மேலும் நில்லாது
‘உடுத்தாள்’ என்னும்