தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   478


அன்மொழிமேல்     நின்றது;    என்று    உதாரணம்    காட்டினார்
சேனாவரையருமென்று உணர்க. 

அஃறிணை,   ‘அவ்வொழுக்கம்   அல்லதாகிய   ஒழுக்கம்’  எனப்
பண்புத்தொகை. அது பொருளை உணர்த்தி நின்றது ஆகுபெயராய். 

‘என்மனார்’  என்பது, ஓர் ஆரீற்று நிகழ்கால முற்று வினைத் திரி
சொல்.  ‘என்றிசினோர்’   என்பது,   அவ்வாறு   வந்த  இறந்தகால
முற்றுவினைத் திரிசொல். 

‘மக்க டாமே ஆற்றி வுயிரே’              (மரபியல் 33) 

என்று  மக்கள் உயர்ந்தமை மரபியலிற் கூறுப. ‘அவரல’ என்னாது, ‘பிற
என்றார்,  அஃறிணையின் உயிருடையனவும் இல்லனவுமாகிய இருகூறும்
அடங்குதற்கு. 

‘மறங்கடிந்த  அருங்கற்பின்’  (புறம்.166:13)  எனவும், ‘சில்சொல்லிற்
பல்கூந்தல்’  (புறம்.166:13)  எனவும்  பிறாண்டும் சான்றோர் செய்யுளில்
‘இன்  சாரியை  உருபு  பற்றாது  நிற்றல்  நோக்கி  உரையாசிரியரும்
‘ஆயிரு  திணையினையும்’  என இரண்டாம் உருபு விரித்துப் பொருள்
கூறினார். 

இனிச் சேனாவரையர், ‘மக்கட்சுட்டு’ என்பதற்கு ‘மக்களாகிய சுட்டு
யாதன்கண்  நிகழும்? அது மக்கட் சுட்டு; என்றும், ‘ஆயிரு திணையின்
இசைக்குமன  சொல்லே’  என்பதற்குச்  ‘சொல் நிகழ்ச்சிக்குப் பொருள்
இடமாதலின்,  ‘ஆயிருதிணையின்கண்’ என ஏழாவது விரிக்க,’ என்றும்
பொருள்  கூறினாராலெனின்,  முன்னர்  ‘மக்கள்  என்று  கருதப்படும்
பொருளை உயர்திணை என்ப,’ என்று அவர் கண்ணழிவு கூறியது, ஒரு
பொருளிடத்து   நின்ற  மக்கட்டன்மையானே  ஒருவற்கு அப்பொருள்
மக்களென்று   கருதப்பட்டதென்று   பொருள்தந்து  நின்றது; பின்னர்,
‘மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும்?’ என்றது நோக்குகின்

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:14:18(இந்திய நேரம்)