Primary tabs

றவர்க்கு ‘மக்களாகிய
கருத்து யாதொரு பொருளிடத்துத் தோன்றும்’
என்று பொருள் தந்தால், ‘வெள்ளாடை’ என்னும்
பண்புத்தொகை போல
அக் கருத்து
மக்களாகாமையிற் பண்புத்தொகை
அன்றாம்; ‘அது
மக்கட்சுட்டு’ என்றதற்கு ‘அப்பொருள்
மக்கட்சுட்டு’ என்று அவர் கூறிய
பொருளானும் மக்களையே தோற்றுவித்துநிற்றலின், அன்மொழித்தொகை
அன்றாம்; அன்றியும், ஆசிரியர் ஈண்டு
ஒரு பொருள் நின்று தன்னை
ஒருவற்கு உணர்த்துமாறும்
ஒருவன் அதனை உணருமாறும்
ஆராய்கின்றாரல்லர்; ‘உயர்ந்த ஒழுக்கம்’ என்று முதனூலாசிரியர் கூறிய
குறி உலகத்தார்க்கு விளங்கப்
பொருள் கூறக் கருதி, அதன் பயன்
எய்துவிப்பத் தாமும் ‘மக்களாகிய
நன்கு மதிக்கும் பொருள்’ என்று
அச்சொற்குப் பொருள் கூறினாரென்று உணர்க.
அவர் கூறிய உயர்ச்சி
தோன்றத் தாமும் ‘நன்கு மதிப்பு’ என்று பொருள் கூறினார், தாமும்
‘உயர்திணை’ என்றே ஆளுதல் பற்றி.
இனி,
‘இசைப்பு இசையாகும்’ (310) என்பதனான், திணை இடமாகச்
சொற்கள் நின்று பிறவற்றை இசைத்தல்
வேண்டும். அதனான் அது
பொருந்தாது. அன்றியும், ஆசிரியர்க்கு
அங்ஙனம் பொருள்கூறுதல்
கருத்தாயின், ‘ஆடூஉ அறிசொல்’ முதலிய சூத்திரங்கள் எல்லாஞ் சொல்
நிகழ்ச்சிக்குப் பொருள் இடமாக, ‘ஆடூஉவின்கண் நிகழுஞ்சொல்,
மகடூஉவின்கண் நிகழுஞ் சொல்’ என்றே சூத்திரஞ் செய்வர்; அங்ஙனஞ்
செய்யாது, ‘ஒருவன் ஆண்மகனை அறியுஞ் சொல்லும் பெண்டாட்டியை
அறியுஞ்சொல்லும்’ என ‘அறியும்’
என்னும் பெயரெச்சம் ‘சொல்’
என்னுங் கருவிப்பொருளைக் கொண்டு முடியச் சூத்திரஞ் செய்தலின்,
ஆசிரியர்க்கு அங்ஙனம் பொருள் கூறுதல் கருத்தன்மை அறிக.
‘மன்’ என்பது, வினை