Primary tabs

பற்றிய அசைநிலை இடைச்சொல்லாய் நின்றது. (1)
உயர்திணை மூன்றுபால்
2.
ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்
பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி
அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே.
இஃது உயர்திணைப் பாலைப் பகுக்கின்றது.
(இ-ள்.) ஆடூஉஅறிசொல்
மகடூஉஅறிசொல்-ஒருவன் ஆண்மகனை
அறியுஞ் சொல்லும் பெண்டாட்டியை அறியுஞ்
சொல்லும், பல்லோர்
அறியுஞ் சொல்லொடு சிவணி - பல்லோரை
அறியுஞ் சொல்லொடு
சிவணுகையினாலே, அம்முப்பாற்சொல்-அம்மூன்று கூறாகிய சொல்லும்,
உயர்திணைய - உயர் திணையினை உடையவாம், எ-று.
ஆண்பன்மையும் பெண்பன்மையும் அவ்விருவருந் தொக்க பன்மையு
மன்றிப் பன்மைப்பொருள் வேறின்மையின்,
ஆடூஉவும் மகடூஉவும்
பல்லோர் அறியுஞ்சொல்லொடு சிவணுகையினாலே
பால் மூன்று கூறு
ஆயிற்றென்றார். எனவே, அல்லுழி இரண்டேயா மென்பது கருத்து.
செய்தெனெச்சங்
காரண காரியப் பொருட்டாய் நின்றது. ‘உயர்
திணைய’ என்ற ஆறாம்வேற்றுமையாய்
நிற்குஞ் சொல், ஈண்டுப்
பெயராகாது வினைக்குறிப்பாய் நின்றது.
இனி, ‘சிவண’ எனத் திரிப்பாருமுளர்.
இவ்வாறன்றிச்
‘சிவணி உயர்திணையவாம்’, என்பார்க்கு, முப்பாற்
சொற்கும் பயனிலையாய் நின்ற ‘உயர்திணையவாம்’ என்னும்
வினைக்குறிப்பு ஆடூஉஅறிசொல் மகடூஉஅறிசொல் என்னும் இரண்டன்
வினையாகிய ‘சிவணி’
என்னும் செய்தெனெச்சத்திற்கு
வினைமுதல்வினையாயிற்று, உயர்திணைய வாகல் ஆடூஉ அறிசொற்கும்
மகடூஉ அறிசொற்கும் எய்து தலின். ‘ஆடூஉ, மகடூஉ’ என்பன