Primary tabs

பண்டையார் வழக்கு. அறிசொல், அறிதற்குக் கருவியாகிய சொல். (2)
அஃறிணை இரண்டு பால்
3.
ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று
ஆயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே.
இஃது அஃறிணைப்பாலைப் பகுக்கின்றது.
(இ-ள்.) ஒன்றறி சொல்லே பலவறி சொல் என்று-ஒருவன் ஒன்றனை
அறியுஞ் சொல்லும் பலவற்றை
அறியுஞ் சொல்லும் என்று
சொல்லப்பட்ட, ஆயிரு பாற்சொல் அஃறிணைய.-அவ்விரண்டு கூற்றுச்
சொல்லும் அஃறிணையினையுடையவாம், எ-று. (3)
பேடி முதலிய சொற்கள் உயர்திணைக்கண் அடங்கும் முறை
4.
பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியுமந் தந்தமக் கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்.
இஃது
ஐயம் அறுக்கின்றது; மேல்
தொகையுள் ஒழிந்த
தெய்வத்தையும் வகையுள் ஒழிந்த பேடியையும் இவ்வாறாமென்றலின்.
(இ-ள்.)
உயர்திணை மருங்கின் பெண்மை சுட்டிய-ஒருவன் உயர்
திணை இடத்துப் பெண்பாற்குரிய அமைதித் தன்மையைக் கருதுதற்குக்
காரணமான, ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்-ஆண்பாற்குரிய
ஆளுந் தன்மை திரிந்த பெயர்ப்பொருளும்,
தெய்வம் சுட்டிய
பெயர்நிலைக் கிளவியும் - தெய்வத்
தன்மையைக் குறித்த பெயர்ப்
பொருளும், இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே-இவையெனத்
தம் பெயர்ப் பொருளினை வேறறிய நிற்கும் ஈற்று எழுத்தினையுடைய
சொற்களைத் தமக்குடைய அல்ல; உயர்திணை மருங்கின் பால் பிரிந்து
இசைக்கும் - உயர்திணை இடத்திற்கு
உரிய பாலாய் வேறுபட்டு
இசைக்கும், எ-று.
‘அலியன்று’ என்றற்குப் ‘பெண்மைசுட்டிய’ என்றார். ‘பெண்