தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   484


யிற்று. 

(எ-டு.) உண்டனர்,  உண்டார்; உண்ணாநின்றனர், உண்ணாநின்றார்;
உண்பர்,  உண்பார்;  கரியார்;  கூறுப,  வருப; ‘ஆர்த்துஆ கொண்மார்
வந்தார்’ என வரும். 

‘மார்  ஈறு,  ஆர் ஈறு என அடங்கும்,’ எனின், மகர ஒற்றுக் காலங்
காட்டும்  எழுத்தாய் முதல்நிலைக்கு ஏற்றவாற்றான் ‘உண்பார், வருவார்’
என்றாற்போல  வேறுபட்டு  வரல்வேண்டும்;  அங்ஙனம் வேறுபடாமை
யானும்,   வினைகொண்டு   முடிதலானும்,  மார்  ஈறு  ஆர்  ஈற்றின்
அடங்காதாயிற்று.  ஏனைப் பன்மை ஈறுகள் திரிபுடைமையின், இவற்றை
‘நேரத் தோன்றும்’, என்றார். ‘பகர இறுதி‘ என்றது, 

‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின்
மொழியா ததனை முட்டின்று முடித்தல்’

(மரபியல் 110)

என்பதற்கு இனம். (7) 

ஒன்றன்பால் ஈறு

8. ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த
குன்றிய லுகரத் திறுதி ஆகும்.
 

இஃது அஃறிணைக்கண் ஒன்றறிசொல் உணர்த்துகின்றது. 

(இ-ள்.)  ஒன்று  அறி  கிளவி-ஒருவன் ஒன்றனை அறியுஞ் சொல்,
தறட   ஊர்ந்த  குன்றியலுகரத்து  இறுதி  ஆகும்  -  தறட  என்னும்
ஒற்றுக்களை ஊர்ந்துவந்த குற்றியலுகரத்தினை ஈறாகவுடைய சொல்லாம்,
எ-று. 

(எ-டு.) வந்தது,  வாராநின்றது, வருவது, கரியது; கூயிற்று, தாயிற்று,
கோடின்று, குளம்பின்று; குண்டுகட்டு, குறுந்தாட்டு என வரும். (8) 

பலவின்பால் ஈறு 

9. அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பால் மூன்றே பலவறி சொல்லே.
 

இஃது, அஃறிணைக்கண் பல அறிசொல் உணர்த்துகின்றது. 

(இ-ள்.)  பல அறிசொல்-ஒருவன் பலவற்றை அறியும் சொல்லாவன,
அ ஆ என வரூஉம் இறுதி அப்பால் மூன்று - அ ஆ வ என வரூஉம்
இறுதியையுடைய அக்கூற்று மூன்று சொல்லாம், எ-று.

(எ-டு.)  அ-உண்டன,  உண்ட,  உண்ணாநின்றன,  உண்ணாநின்ற,
உண்பன, உண்ப, கரியன, கரிய, கோ

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:15:24(இந்திய நேரம்)