தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   485


ட்ட என வரும். 

‘உண்ப  என்பது  பலர்  அறிசொல் லன்றோ?’ எனின், ‘தகைத்தன,
தகையாநின்றன,  தகைப்பன’  என ‘அன்’ பெற்றும், ‘தகைத்த, தகையா
நின்ற,  தகைப்ப’  என ‘அன்’  பெறாதும்  நின்றாற்போலவும், ‘கானம்
தகைப்ப  செலவு’  (கலி. 3:22)  என்றாற்போலவும்,  ‘உண்ப’ என்பதும்
‘அன்’  பெறாது நின்ற அகர ஈற்றுப் பல அறிசொல்; பகர ஈற்றுப் பலர்
அறிசொல் அன்று. 

ஆ-உண்ணா, தின்னா 

எனவும், 

வ-உண்குவ, தின்குவ 

எனவும் வரும். 

‘இவை  ‘அன்’  பெறாது  எதிர்காலத்து  வரும் வகர ஒற்று ஊர்ந்து
நின்ற  அகர  ஈற்று  ஆகாவோ?’  எனின்,  குகரம்  பெறுதலின் வகர
ஈறேயாம்.  ‘வருவ,  செல்வ’ எனக் குகரம் பெறாதவழி அகர ஈறாதலும்,
பெற்றவழி வகர ஈறாதலும் உடையவாம். (9) 

இவ் ஈறுகள் வினையில் வருதல் 

10. இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய
ஈற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்
தோற்றந் தாமே வினையொடு வருமே.
 

இது,  மேற்  பாலுணர்த்திய  எழுத்து  இனைய  என்றும்,   அவை
வினைக்கண் நின்று உணர்த்துமென்றும் உணர்த்துகின்றது. 

(இ-ள்.) இரு   திணை  மருங்கின்  ஐம்பால் அறிய - உயர்திணை
அஃறிணை  என்னும்  இரண்டு  திணைக்கண்ணும் உளவாகிய ஒருவன்
ஒருத்தி  பலர்  ஒன்று  பல என்னும் ஐந்து பாலினையும் அறிய, ஈற்று
நின்று 

இசைக்கும் பதினோர் எழுத்தும்-அவ்வச் சொல்லின் இறுதிக்கண் நின்று
ஒலிக்கும்  பதினோரிடைச்  சொற்களும்,  தோற்றந்தாமே வினையொடு
வருமே-பால் உணர்த்துதற்குப் புலப்படுதற்கண் வினைச்சொற்கு ஈறாய்ப்
புலப்படும், எ-று. 

பதினோரிடைச்சொல்லையும்   ‘எழுத்து’   என்றார்,  எழுத்தினான்
சொல்லாதல்பற்றி. இது கருத்தாதல், ‘மா

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:15:35(இந்திய நேரம்)