Primary tabs

காண்டலும்,
அவன் அறிவு தான் காண்டலும்,
மெய் அவற்குக்
காட்டலும் அடங்கின.
ஒரு
விரல் காட்டி, ‘நெடிதோ, குறிதோ?’ என்றலும்,
‘கறக்கின்ற
எருமை சினையோ, பாலோ?’ என்றலும், பிறவும் வினா வழுவாம்.
செப்பு
ஆசிரியன் கண்ணதாகலானும், வினாவின்றியும்
செப்பு
நிகழ்தலானுஞ் செப்பு முற்கூறினார்.
செவ்வன்
இறையும், அறியான் வினாவும், ஐயவினாவும் வழாநிலை
யாதலின்,‘வழாஅல் ஓம்பல்’, என்பதனாற் கொள்க. ஏனைய, வழுவமைப்
புழிக் காண்க. (13)
வினா செப்பாகவும் வருதல்
14. வினாவும் செப்பே வினாவெதிர் வரினே.
இது வழுவமைக்கின்றது.
(இ-ள்.)
வினா எதிர் வாரின் - வினாப்பொருளை ஒருவாற்றான்
அறிவுறுத்து வினாவிற்கு மறு மொழியாய் வரின், வினாவும் செப்பு -
வினாத்தானும் செப்பாம், எ-று.
‘சாத்தா,
உண்டியோ?’ என்று வினாயமொழி, உண்ணேனோ?’ என
வரும் வினா, வினா வாய்பாட்டான் வந்ததேனும், ‘உண்பேன்’, என்னும்
பொருள்பட வருதலின், செப்பு ஆயிற்று, இது, வினாவெதிர் வினாதல்.
(14)
செப்பு வழுவமைதி
15.
செப்பே
வழீஇயினும் வரைநிலை இன்றே
அப்பொருள் புணர்ந்த கிளவி யான.
இதுவும் அது.
(இ-ள்.) செப்பே
வழீஇயினும் வரைநிலை இன்று-செவ்வன் இறை
ஆகாது செப்பு வழுவி வரினும் கடியப்படாது, அப்பொருள் புணர்ந்த
கிளவியான - ஒருவாற்றான் அவ்வினாய பொருட்கு இயைபுபட்ட கிளவி
யாதற்கண், எ-று.
‘சாத்தா,
உண்டியோ?’ என்று வினாயவழி, ‘வயிறு குத்திற்று’ என
உற்றது உரைத்த