தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   491


லும்,  ‘வயிறு குத்துகின்றது,’  என மறுத்தலும், ‘நீஉண்’, என ஏவுதலும்,
‘வயிறு குத்தும்,’ என உறுவது கூறலும், ‘பசித்தேன்,’ என்றும், ‘பொழுது
ஆயிற்று,’  என்றும்  உடம்படுதலும்  ஒருவாற்றான் வினாய பொருளை
அறிவுறுத்தன.  ‘குமரியாடிப்  போந்தேன்.  ஒரு  பிடி சோறு தம்மின்,’
என்பது,  சொல்லாது இறுத்தல், ‘எப்பொரு ளாயினும்’ (35) என்புழியும்,
அப்பொருள்’ (36) என்புழியும் கூறுப. 

‘செப்பே’  என  நின்ற  ஏகாரம்.  பிரிநிலை  ஏகாரம்; வினாநிற்பச்
செப்பை வாங்கிக்கொண்டு அமைத்தலின். உம்மை, சிறப்பும்மை. 

செப்பு வழுவினும் அமைக. வினா வழீஇயின இடத்து அமையாதாம்.
(15) 

செப்பிற்கும் வினாவிற்கும் மரபு

16. செப்பினும் வினாவினும் சினைமுதல் கிளவிக்கு
அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே.
 

இது செப்பிற்கும் வினாவிற்கும் மரபு கூறுகின்றது. 

(இ-ள்.)  செப்பினும்  வினாவினும்  - செப்பின்கண்ணும் வினாவின்
கண்ணும்,    சினை    முதல்    கிளவிக்கு   -   சினைக்கிளவிக்கும்
முதற்கிளவிக்கும்,   உறழ்   துணைப்  பொருளே  - ஒப்புமை கருதாது
மாறுபடக்  கூறும்  பொருளும்  ஒப்புமை  கூறப்படும் பொருளும், அப்
பொருள் ஆகும் - அவ்வப் பொருளுக்கு அவ்வப்பொருளேயாம், எ-று.

(எ-டு.) இவள்  கண்ணின்  இவள் கண் பெரிய; நும் அரசனின் எம்
அரசன் முறை செய்யும்; இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ? எம்
அரசனின் நும்  அரசன் முறை செய்யுமோ? இவள் கண் ஒக்கும் இவள்
கண்; எம் அரசனை ஒக்கும் நும் அரசன்;

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:16:42(இந்திய நேரம்)