தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   492


இவள்  கண்  ஒக்குமோ  இவள்  கண்? எம் அரசனை ஒக்குமோ நும்
அரசன்? என வரும். 

‘தன்னினம்  முடித்தல்’  என்பதனான்,  எண்ணுங்காலும்,  ‘துகிரும்,
முத்தும்,   பொன்னும்’   என   இனம்  ஒத்தன  எண்ணுக;  ‘முத்தும்,
கருவிருந்தையும், கானங்கோழியும், பொன்னும்’ என்று எண்ணற்க. (16) 

இயல்புவழக்கும் தகுதிவழக்கும் அமையுமாறு

17. தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை இலவே.
 

இது மரபுவழு அமையுமாறு கூறுகின்றது. 

(இ-ள்.) தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்-ஒருபொருட்கு உரிய சொல்லான்  பட்டாங்கே   சொல்லுதல்   நீர்மை  அன்று என்று அது களைந்து    அதற்குத்   தக்கதொரு   வாய்பாட்டாற்   கூறுதலையும், ஒருகாரணமின்றி  வழங்கற்பாடே  பற்றி வருவதனையும் பற்றி நடக்கும், பகுதிக்கிளவி-இலக்கணத்தின்  பக்கச்சொல், வரை நிலைஇல-கடியப்படா, எ-று. 

செத்தாரைத்  ‘துஞ்சினார்’   என்றலும்,   ஓலையைத்   ‘திருமுகம்’ என்றலும்,  சுடுகாட்டை ‘நன்காடு’ என்றலும், கெட்டதனைப் ‘பெருகிற்று’ என்றலும் போல்வன தகுதி. 

பண்பு   குறியாது   சாதிப்பெயராய்   ‘வெள்யாடு,   வெண்களமர், கருங்களமர்’ என வருவனவும், குடத்துள்ளும் பிற கலத்துள்ளும் இருந்த நீரைச்  ‘சிறிது’  என்னாது  ‘சில’  என்றலும், அடுப்பின் கீழ்ப்புடையை ‘மீயடுப்பு’ என்றலும் போல்வன வழக்காம். (17) 

செய்யுட்குரிய மரபு வழுவமைதி

18. இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே.
 

இது செய்யுட்கு மரபு வழுவமைதி கூறுகின்றது. 

(இ-ள்.) இனச்சுட்டு இல்லாப் பண்பு கொள் பெயர்க் கொடை -
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:16:53(இந்திய நேரம்)