தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   493


இனத்தைச்  சுட்டி  அவற்றினின்றும் விசேடிக்கப்படுதல் இல்லாத பண்பு
அடுத்து வழங்கப்படும் பெயரை ஒரு பொருட்குக் கொடுத்தல், வழக்காறு
அல்ல செய்யுளாறு-வழக்கு நெறியல்ல; செய்யுள் நெறி, எ-று. 

‘செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்திங்களுள் வெயில்வேண்டினும்’
         (புறம். 38) 

என   இவை   கருஞாயிறும்   கருந்திங்களுமாகிய இனம் இன்மையின்
விசேடிக்கப்படாவாயினும், செய்யுட்கு அணியாய் நிற்றலின் அமைத்தார்.
எனவே, வழக்கின்கண் பண்புகொள் பெயர் இனம் குறித்து வருதல் மரபு
என்பதூஉம்,   செய்யுட்கண்   வழீஇ   அமைதல்   மரபு என்பதூஉம்
கூறியவாறு ஆயிற்று. 

பண்பு   அடாது , ‘வடவேங்கடம்  தென்குமரி’  (தொல். பாயிரம்),
முட்டாழை,  கோட்சுறா  எனத் திசையும் உறுப்பும் தொழிலும் முதலிய
அடை  அடுத்து  இனஞ்  சுட்டாது  வருவன, ‘ஒன்றென முடித்த’லான்
செய்யுளாறென அமைக்க. (18) 

இயற்கைப்பொருட்கண் மரபு வழாமை

19. இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல். 

இஃது இயற்கைப் பொருட்கண் மரவு வழுவாமை கூறுகின்றது. 

(இ-ள்.) இயற்கைப் பொருளை - பொருட்குப்பின் தோன்றாது உடன்
நிகழுந்  தன்மைத்தாய  பொருளை,  அதன்  இயல்பு கூறுங்கால், இற்று
எனக்   கிளத்தல் - ஆக்கமுங்  காரணமுங்  கொடாது  ‘இற்று’  எனச்
சொல்லுக, எ-று. 

(எ-டு.)  நிலம்  வலிது,  நீர் தண்ணிது, தீ வெய்யது, வளி உளரும்,
உயிர் உணரும் என வரும். 

சேற்று நிலம் மிதித்து வன்னிலம் மிதித்தான், ‘நிலம் வலிதாயிற்று‘
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:17:04(இந்திய நேரம்)