Primary tabs

உயர்திணை ஆண்பால் உணர்த்தும் அன்னீற்றுப்பெயர் அஃறிணை
ஆண்பாலையும் உணர்த்தி நிற்றலின் விரவுப்பெயராயினும், ஈண்டுப்
பொருட்கு உபகாரப்படும் இறைச்சிப் பொருளாய் நிற்றலின்,
அஃறிணைப்பெயராம். ‘குமரி’ என்பதூஉம் விரவுப்பெயர் ஈண்டு
அஃறிணைப் பெயர் ஆயிற்று. (42)
எய்தியது விலக்கல்
199.
இஃது, எய்தியது விலக்கிற்று.
(இ-ள்.)
உணர்த்தும் விரவுப்பெயர் உயர்திணை சுட்டாது அஃறிணை சுட்டுவது
திணைதோறும் உரிமை பூண்டு வழங்கப்பட்டு வரும் பெயர் அல்லாத
இடத்து, எ-று.
உயர்திணையுஞ் சுட்டி வரும் என்பதாம்.
(எ-டு.) ‘அவளும், செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு’
(நற். 184) ‘திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே’ (அகம்.
195:2) என வரும். ஓர் எருந்தும் ‘காளை, விடலை’ எனப்படுதலின்,
இவை விரவுப் பெயராயின. (43)
பெயரியல் முற்றிற்று.

