தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   645


கண்டிப்பால் நோக்குவேற்கு’ (சீவக.1751) என்புழிப் ‘பார்க்கின்றேற்கு’
எனப் பொருள் தந்தவாறு காண்க. பகரம் வந்துழிக் காண்க. 

வருவல்   என   வரும்;   உண்ணாநிற்பல்   எனச்  சிறுபான்மை
நிகழ்காலமும் பெறும். ஒழிவல், தவிர்வல் என வரும் மறை வாய்பாடும்
அறிக.

வைத்தமையான், செய்கும் என்பதூஉம்  காண்கும்  வந்தேம்,  என
வினை கொண்டு முடியும். (6) 

செய்கு வினைகொண்டு முடிதல்

206. அவற்றுள்,
செய்கென் கிளவி வினையொடு முடியினும்
அவ்வியல் திரியா தென்மனார் புலவர்.
 

(இ-ள்.)  செய்கு  என்  கிளவி  வினையொடு  முடியினும் - செய்கு
என்னும்  முற்றுச்  சொல்    பெயரொடு    முடியாது    வினையொடு
முடியினும், அவ்வியல் திரியாது   என்மனார்    புலவர் - அம்முற்றுச்
சொல்லாம் தன்மையின் திரியாது என்று கூறுவர் புலவர், எ-று. 

(எ-டு.)   ‘காண்கு  வந்திசின்  பெரும!  (புறம்.17:33) என   வரும்.
‘நோகோ யானே’    (ஐங்குறு.    205)    எனப்   பெயர்   கோடல்
சிறுபான்மையாம். (7) 

படர்க்கை ஒருமை வினைமுற்று

207. அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும்
ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.
 

(இ-ள்.)
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:45:20(இந்திய நேரம்)