தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   646


 

உடைய   நான்கு   சொல்லும்,  ஒருவர்  மருங்கிற் படர்க்கைச் சொல்லே-
ஒருவன்,   ஒருத்தி    என்னும்   உயர்திணை   ஒருமைப்    பாலிடத்துப்
படர்க்கையை உணர்த்துஞ் சொல்லாம், எ-று.
 

அள்ளும் அம் ஈற்றோடும், ஆனும் ஆளும் ஆம் ஈற்றோடும் ஒக்கும்.
 

(எ-டு.)   உண்டனன், உண்டிலன்; உண்ணாநின்றனன், உண்கின்றனன்,
உண்ணாநின்றிலன்,   உண்கின்றிலன்;   உண்பன், உண்குவன், உண்ணலன்
எனவும்,  உண்டான்,    உண்டிலான்;    உண்ணாநின்றான், உண்கின்றான்,
உண்ணாநின்றிலான்,      உண்கின்றிலான்;     உண்பான்,   உண்குவான்,
உண்ணான்   எனவும்,    உண்டனள்,    உண்டிலள்;  உண்ணாநின்றனள்,
உண்கின்றனள்,    உண்ணாநின்றிலள்,      உண்கின்றிலள்;     உண்பள்,
உண்குவள்,    உண்ணலள்     எனவும்,     உண்டாள்,    உண்டிலாள்;
உண்ணாநின்றாள்,  உண்கின்றாள்.   உண்ணாநின்றிலாள்,  உண்கின்றிலாள்;
உண்பாள்,   உண்குவாள்,  உண்ணாள்  எனவும்  வரும், உண்டனனல்லன்,
உண்டானல்லன்;    உண்டனளல்லள்,     உண்டாளல்லள்   எனப்   பிற
வாய்ப்பாட்டான்வரும் மறையும் அறிக. (8)
 

படர்க்கைப் பன்மை வினைமுற்று
 

208.

அர்ஆர் ப என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கிற் படர்ககைச் சொல்லே.
 

 

(இ-ள்.)ஈற்று  எழுத்தினை  உடையவாய்   வரும்   மூன்று  சொல்லும்,  பல்லோர்
மருங்கிற்     படர்க்கைச்     சொல்லே  -  பல்லோரிடத்துப்  படர்க்கைப்
பன்மையை உணர்த்துஞ் சொல்லாம்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:45:31(இந்திய நேரம்)