தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   659


 

என்னுஞ்  சொற்களும், பண்பு கொள் கிளவியும் -  நிறப் பண்பைத்
தனக்கு   அடியாகக்கொண்ட  சொல்லும்,  உள  என்  கிளவியும்-உள
என்னுஞ்   சொல்லும்,   பண்பின்   ஆகிய  சினைமுதற்  கிளவியும்-
நிறப்பண்பானுங்  குணப்பண்பானும்  உளவாகிய  சினையொடு முதலை
உணர்த்துஞ்  சொல்லும்,  ஒப்பொடு  வரூஉம் கிளவியொடு தொகைஇ-
உவமப் பொருள்பற்றி வருஞ் சொல்லோடே தொக்கு, அப்பால் பத்தும்
குறிப்பொடு  கொள்ளும்  -  அக்கூற்றுப்  பத்துச்  சொல்லுங்  காலங்
குறித்துக்கோடலொடு வரும் வினைச்சொல்லாகக் கொள்ளப்படும், எ-று.
 

(எ-டு.)  இன்று,  இல;  உடைத்து,  உடைய; அன்று, அல்ல; உள
என்பன  ஒருமையும்  பன்மையுமாகிய வாசகத்தை உணர்த்தி நின்றன.
அல்லன பொருள் உணர்த்தி நின்றன.
 

‘உண்டு’  என்னுஞ்  சொல்  உண்மையை உணர்த்துங்கால் ‘இன்று’
என்னுஞ் சொல்லும் அதற்கு மறையாய், ‘முயற்குக் கோடு இன்று’ எனப்
பொய்ம்மையை உணர்த்தியும், அவ் ‘உண்டு’ என்னுஞ் சொல்  பண்பை
உணர்த்துங்கால் அவ் ‘இன்று’ என்னுஞ் சொல்லும் அதற்கு  மறையாய்,
‘இக்குதிரைக்கு எக்காலமும் நடை இன்று’ எனப் பண்பை உணர்த்தியும்,
அவ்  ‘உண்டு’  என்னுஞ்  சொல்  குறிப்பை உணர்த்துங்கால் ‘இன்று’
என்னுஞ்  சொல்லும்  அதற்கு மறையாய், ‘இக்குதிரைக்கு ஈண்டு நடை
இன்று,’  எனக்  குறிப்ைஉணர்த்தியும் நிற்கும். ‘பொருண்மை சுட்டல்
(67) என்பதனான் உண்மை உணர்த்தலும், ‘உண்டென் கிளவி உண்மை
செப்பின்’   (எழுத்.  430)  என்பதனான்  வினைக்குறிப்பும்   பண்பும்
உணர்த்தினமையும் பெற்றாம்.
 

இனி, ‘உள’ என்னும் பன்மைக்கு ‘இல’ என்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:47:56(இந்திய நேரம்)