Primary tabs

னும் பன்மை மறையாம். இதற்கு ‘உளது’ என்னும் ஒருமை ஈறு
சிறுபான்மை ஆதலின், கூறிற்றிலர். அதுதான், ‘மா உள’ எனப் பண்பு
உணர்த்தியும், ‘ஈண்டு நெல் உள,’ எனக் குறிப்பு உணர்த்தியும் நிற்கும்.
இனி, ‘அறம் செய்வார்க்குத் துன்பங்கள் இல,’ எனப் பண்பு
உணர்த்தியும் ‘ஈண்டு உழுந்து இல,’ எனக் குறிப்பு உணர்த்தியும்
நிற்கும்.
இனி, ‘உடைத்து, உடைய’ என்னும் ஒருமையும் பன்மையும் பெரும்
பான்மை உறுப்பின்கிழமையும் பிறிதின்கிழமையும் பற்றி வரும்.
இவ்வெருது கோடு உடைத்து; இவ்வெருதுகள் கோடு உடைய எனப்
பண்பு உணர்த்தியும், ‘குருதி படிந்துண்ட காகம் குக்கிற்புறம் உடைத்து,
உடைய,’ (களவழி.5) எனக் குறிப்பு உணர்த்தியும் நிற்கும்.
‘இன்று, இல’ எனபன, இவ்வுடைமைக்கு மறுதலையாய்க் ‘கோடு
இன்று; கோடு இல,’ என நிற்கும். இவற்றிற்குப் பொருள் உரைக்குங்கால்
‘கோடு உடைத்து அன்று; கோடு உடைய அல்ல,’ என ‘அன்று, அல்ல’
என்னும் வாசகம் வருமாறும் உணர்க.
இனி, ‘அன்று, அல்ல’ என்பன ஒருமையும் பன்மையும் உணர்த்தும்.
‘உழுந்து அன்று பயறு; உழுந்து அல்ல பயறு,’ எனப் பண்பு
உணர்த்தியும், ‘வேல் அன்று வென்றி தருவது’ (குறள்.546) எனவும்,
‘படை அல்ல வென்றி தருவன,’ எனவுங் குறிப்பு உணர்த்தியும் நிற்கும்.
‘ஒன்றென முடித்த’லான், ‘நன்று, தீது; நல்ல, தீய’ என்பனவுங்
கொள்க.
பண்பு கொள் கிளவி: கரிது,

