Primary tabs

கரிய. பண்பின் ஆகிய சினை முதற் கிளவி: வெண்கோட்டது,
வெண்கோட்டன; நெடுஞ்செவித்து, நெடுஞ்செவிய. ஒப்பொடு வரூஉங்
கிளவி: பொன்னன்னது, பொன்னன்ன என வரும்.
இனி, ‘அறிந்த மாக்கட்டாகுக தில்ல’ (அகம். 15:8) ‘மெல்விரல் மந்தி
குறை கூறும் செம்மற்றே’ (கலி. 40:16) மேற்று, வைகற்று. ‘அணித்தோ
சேய்த்தோ கூறுமின் எமக்கே’ (புறம். 173: 12) என்பன
பிறிதின்கிழமையாகிய உடைமைப் பொருள் பட நின்றன. ‘வடாஅது
தெனாஅது’ (புறம். 6:1,2) என்பன ஏழனுருபின் பொருள்பட வந்தன.
மூவாட்டையது, செலவிற்று என்பன காலமுந் தொழிலும்பற்றி வந்தன.
இவை எல்லாம் உரையிற் கோடலாம். (23)
அஃறிணைக் குறிப்புவினைமுற்றின் ஈறு
223.
இஃது, அவ்வினைக்குறிப்பிற்கு ஈறாமாறு கூறுகின்றது.
(இ-ள்.) பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த - பன்மையும்
ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த, அன்ன மரபிற் குறிப்பொடு
வரூஉம் காலக் கிளவி-அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய
காலங் குறித்துக்கோடலொடு வரும் வினைச்சொற்கள், அஃறிணை
மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே-அஃறிணையிடத்து
மேற்கூறிய தெரிநிலைவினையின் ஈறுகளோடு ஈறு வேறுபாடு இல, எ-று.
அகரமுந் தகர றகர உகரமும் பெரும்பான்மை அவ்வீறு பற்றிப்
பாலும் இடமும் உணர்த்துதல் முற்காட்டியவற்றுள் காண்க.
இனி ஆகாரம் ‘இம்மணி நல்ல, என்னும் உடம்பாட்டுக் குறிப்பிற்கு
இம்மணி

