Primary tabs

பொல்லா, என மறையாய் வரும்.
இனி, வகரம், ‘கதவவாற் றக்கதோ காழ்கொண்ட இளமுலை?’
(கலி.57.19) என்புழிக் கதத்தினையுடைய என வரும்.
இனித் தெரிநிலையுடன் கூடிய டகர உகரம் பூணை உடைத்து,
என்னும் பொருண்மைக்கண் பூட்டு எனவும்; இடத்தது என்னும்
பொருண்மைக்கண், ‘வகைதெரிவான் கட்டே உலகு’ (குறள்.27) எனவும்;
எந்நாளது என்னும் பொருண்மைக்கண், எந்நாட் டாகுநும் போரே?
எனவும்; விளைவினை உடைத்து; என்னும் பொருண்மைக்கண், ‘வேலி,
ஆயிரம் விளையுட்டாக!’ (பொருந. 246-47) எனவும்; குழிவினையுடைய
கண்ணை உடைத்து, என்னும் பொருண்மைக்கண், குண்டு கட்டு
எனவும்; பொருள், இடம், காலம், தொழில், உறுப்பு என்னும்
ஐவகைப்பெயரும் அடியாக வரும். ஓட வற்று, ஓட வல்ல; ஓட
வல்லாது, ஓட வல்லா என்பனவுங் கொள்க. (24)
விரவு வினையின் பெயரும் முறையுந் தொகையும்
224.
இது, நிறுத்த முறையானே விரவுவினை உணர்த்துகின்றவற்றின்
பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது.
(இ-ள்.) முன்னிலை - எதிர்முகமாக நின்ற பொருளினது தொழில்
உணர்த்தும் முற்றுச்சொல்லும், வியங்கோள்-படர்க்கைப் பொருள்மேல்
ஏவற்பொருண்மையைக் கொண்

