Primary tabs

டுவரும் முற்றுச் சொல்லும், வினை எஞ்சு கிளவி - முடிக்கும்
வினையை ஒழிபாக உடைய வினைச்சொல்லும், இன்மை செப்பல் -
இன்மை என்னும் பண்பினை உணர்த்தும் இல்லை என்னும்
வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், வேறு என் கிளவி - வேறு என்னும்
வேறுபாடுதன்னை உணர்த்திநிற்கும் வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும்,
செய்ம்மன - மன ஈற்றுப் பெயர் எச்சமாய் எதிர்காலம் உணர்த்தும்
செய்ம்மன என்னுஞ் சொல்லும், செய்யும் என்னுஞ் சொல்லும்,
செய்த-அகர ஈற்று எச்சமாய் இறந்த காலம் உணர்த்தும் செய்த
என்னுஞ் சொல்லும், என்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் -
என்று சொல்லப்படுகின்ற அவ்வடைவின்கண் நின்ற அவ்வெட்டுச்
சொல்லும், பிரிவு வேறுபடூஉம் செய்திய ஆகி - பொதுமையிற் பிரிந்து
ஒருகால் உயர்திணையையும் ஒருகால் அஃறிணையையும் உணர்த்தி
வேறுபடுந் தொழிலை உடையவாய், இருதிணைச் சொற்கும். ஓரன்ன
உரிமைய - இருதிணையை உணர்த்துஞ் சொல்லாதற்கும் ஒத்த
உரிமையவாம், எ-று.
என் செய்யாநின்றான்? என்று வினாயவழி, உண்ணாநின்றான், எனச்
செப்புதலின், செய் என்னும் வாசகம் எல்லாத் தொழிலினையும்
அகப்படுத்தி நிற்றல்பெற்றாம். இருதிணைக்கும் பொதுவாயதொரு
பொருள்

